பாலியல் குற்றம்சாட்டில் பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது!-யார் இந்த சின்மயானந்தா?

சின்மயானந்தா தலைவராக இருக்கும் ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரி.

உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூர்  நகரில் உள்ள ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியில் தலைவராக இருக்கும் சின்மயானந்தா, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இவர்  மத்திய இணை அமைச்சராகப்  பதவியில் இருந்தார்.

சின்மயானந்தா தலைவராக இருக்கும் சுக்தேவானந்த் சட்டக்  கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வரும் 23 வயது மாணவி ஒருவர், சின்மயானந்தா மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி கடந்த மாதம் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வீடியோ வெளியான அடுத்த நாளே, அந்த மாணவி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அந்த மாணவி ராஜஸ்தான் மாநிலத்தில் மீட்கப்பட்டார்.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது, இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாணவியின் புகார் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி உத்தரபிரதேச காவல்துறை .ஜி நவீன் அரோரா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவினர் புகார் ளித்த மாணவி தங்கியிருந்த கல்லூரி விடுதி அறையில் சோதனை நடத்தி, அந்த அறைக்கு சீல் வைத்தனர். பின்னர் இந்த விவகாரம் குறித்து சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது ஆசிரமத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

அதன்பின்னர்,அந்த பெண்ணிடமும் விசாரணை நடத்தினர். குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஒரு வருடத்திற்கு மேலாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான பல வீடியோக்களை சிறப்பு விசாரணைக் குழுவிடம் பெண்ணின் தந்தை வழங்கினார்.

சிறப்பு புலனாய்வுக்குழு இந்த வீடியோக்கள் மற்றும் தகவல்களை தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் வழங்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீட்டில் சிகிச்சை பெற்று வந்த சின்மயானந்தா.

இந்நிலையில், உடல் நலம் சரியில்லை என்று சொல்லி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த சின்மயானந்தாவை, காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து, நீதிபதி உத்ரவின்பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எத்தனை படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய பதவி வகித்தாலும், தனிப்பட்ட ஒழுக்கமும், உண்மையும் இல்லையென்றால் இதுபோன்ற அவமானங்களை நிச்சயம் சந்தித்தே ஆக வேண்டும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

Leave a Reply