மஹாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடந்தது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. திடீர் திருப்பமாக தேசியவாத காங். கட்சியை சேர்ந்த அஜித் பவார் ஆதரவுடன், 23-ல் பா.ஜ.க ஆட்சி அமைத்தது. முதல்வராக பா.ஜ.க வின் தேவேந்திர பட்னவிசும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.
இதை எதிர்த்து சிவசேனா, காங்., தேசியவாத காங்., ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து மஹாராஷ்ராவில் மாயா ஜாலங்கள் நடைப்பெற்றுவருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் தேவேந்திரபட்னாவிஸ் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், மும்பையில் தற்போது நடைப்பெற்ற சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கூட்டணி தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு இரவோடு, இரவாக ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.
மஹாராஷ்ராவில் யார் தலைமையில் ஆட்சி அமைந்தாலும், அம்மாநில மக்களுக்கு எந்த நன்மையும் நடக்காது. கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி பட்ட அவமானத்தை போல இவர்களும் படுவார்கள்.
–டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com