Hon’ble Mr. Justice Sharad Arvind Bobde,The Chief Justice Of India
Honble-Mr.-Justice-Bhushan-Ramkrishna-Gavai.
Honble Mr Justice Surya Kant.
Loading...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் டிசம்பர்-27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடக்கும் எனவும், இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (டிசம்பர்06) துவங்கும் எனவும், தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி டிசம்பர் 02 தேதி அறிவித்திருந்தார்.
ஆனால், வார்டு வரையறை விவகாரம் தொடர்பாக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், நகர்புறங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்காமல், ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதற்கும் திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர்06) காலை தீர்ப்பு வழங்கியது.
அதில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்றவைகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் எனவும், 9 மாவட்டங்களில் 4 மாதங்களில் வார்டு வரையறை செய்யப்பட்டு, உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கும் என கூறப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று அளித்த இந்த தீர்ப்பு காரணமாக, ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிப்பாணையை, தமிழக தேர்தல் ஆணையம் இன்று வாபஸ் பெற்றது. புதிய தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியிடப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆனால், வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
–டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com