மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.

 

 

திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 634 மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும்  விழா  இன்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமை வகித்தார். அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன் வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர்.

2011 மற்றும் பதில் 12 ஆம் ஆண்டுகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு ,மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. 2017 லேப்டாப் வழங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் வழங்க முடியவில்லை.

அதன்பிறகு தற்போது பள்ளிகளில் லேப்டாப் வழங்கப்பட்டுவிட்டது.

மேலும் தற்போது தொழிற்கல்விகளுக்கு லேப்டாப் வழங்குகிறது.

இந்த ஆண்டு இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது என்றும் விரைவில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் வழங்கப்படும்.

லேப்டாப் வழங்குவதன் நோக்கம் தொழில் நுட்ப வளர்ச்சி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும் .மாணவர்கள் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்த வேண்டும் தொழில் வளர்ச்சி முன்னேற்றத்திற்கு 2021 ஆண்டு வழி செய்ய வேண்டும்.

இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு பேசினார்.

திருவெறும்பூர் தாசில்தார் ஞானாமிர்தம் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை அமைச்சர் வளர்மதி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கினார்கள்.

இந்த விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் தமிழ்செல்வம் வரவேற்றார்.

இயந்திரவியல் துறைத் தலைவர் முருகேசன் நன்றி கூறினர்.

– ஆர்.சிராசுதீன்.

One Response

  1. MANIMARAN January 28, 2020 10:40 pm

Leave a Reply