புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் விளக்கமும்:
1) குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடுகளை திரும்பப் பெற வேண்டுதல்.
2) காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தல் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் அறிவிக்கையினைத் திரும்பப் பெற வேண்டுதல்.
3) இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த வேண்டுதல்.
4) 70 – வது இந்திய அரசியலமைப்பு சட்டநாள் கொண்டாட்டம் தீர்மானம்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஏற்கனவே 147 வழக்குகள் உள்ளன. தேவை ஏற்பட்டால் நானே வழக்கு தொடர்வேன்.சட்டமன்றத்தில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை.ரகசியத்தை காக்க தவறிவிட்டார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.நேற்றுமுன்தினம் எனக்கு அனுப்பியது ரகசிய கடிதத்தை வெளியிட்டது ஏன்?
Posted by V.Narayanasamy on Wednesday, 12 February 2020
-திவாஹர்.