கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பிரதமர் நரேந்திரமோதி பார்வையிட்டார்!

இந்தியா கேட் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 250-க்கும் அதிகமான ‘கைவினைப் பொருட்கள் அரங்குகளை பிரதமர் நரேந்திரமோதி இன்று பார்வையிட்டார்.

Trying my hand at some music at the Hunar Haat in Delhi. Hear this… 🎶 🎵

Trying my hand at some music at the Hunar Haat in Delhi. Hear this… 🎶 🎵

Posted by Narendra Modi on Wednesday, 19 February 2020

நாடு முழுவதிலும் இருந்து கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ள கைவினைக் கலைஞர்கள் மற்றும் சமையல் நிபுணர்களின் அரங்குகளை அவர் பார்வையிட்டார். 

பங்கேற்றுள்ள கலைஞர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கண்காட்சியில் பங்கேற்றுள்ள கலைஞர்களுடன் பிரதமர் நரேந்திரமோதி கலந்துரையாடினார். உணவு அருந்தினார், கலை நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். 

அழிவின் விளிம்பில் இருக்கும் பல வகையான இந்திய உள்நாட்டுப் பாரம்பரிய கலைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இவற்றில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டைக் ‘கைவினைப் பொருட்கள் கண்காட்சி’  பிரதிபலிக்கிறது.

இந்த ஆண்டின் கைவினைப்பொருட்கள் கண்காட்சிக்கான மையக்கருத்து ‘திறனுக்கான பணி’ என்பதாகும்.  கடந்த 3 ஆண்டுகளில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமான கைவினைக் கலைஞர்கள் மற்றும் சமையல் நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகளில் ஏராளமான பெண் கலைஞர்களும் அடங்குவர்.

-எஸ்.சதிஸ் சர்மா.

 

One Response

  1. MANIMARAN March 22, 2020 12:37 pm

Leave a Reply