முந்தைய இந்திய ஆட்சியாளர்களால் (இந்திரா காந்தி) இலங்கைக்கு தாரைவார்க்கபட்ட, தற்போது இந்திய கடல் எல்லைக்கோட்டிற்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் கச்சதீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், நீண்ட காலமாக இந்திய மற்றும் இலங்கை கத்தோலிக்க பக்தர்களின் மரியாதைக்குரிய புனித ஸ்த்தலமாக இருந்து வருகின்றது.
வழக்கமான சடங்குகளுக்கு முன்னுரிமை அளித்து, புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா (மார்ச் 07, 2020) கொண்டாடப்பட்டது.
இலங்கை கடற்படையால் கட்டப்பட்ட இத்தேவாலயத்தில் இந்த ஆண்டின் நடத்தப்பட்ட நான்காவது திருவிழா இதுவாகும்.
வழக்கம் போல், இந்த ஆண்டு திருவிழாவை ஏற்பாடு செய்ய இலங்கை கடற்படை, யாழ்ப்பாண பிஷப் மற்றும் மாவட்ட செயலாளர்களினால் உதவி வழங்கப்பட்டது.
திருவிழா திருப்பலி சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டது.
சிங்கள மற்றும் ஆங்கில திருப்பலி காலி மறைமாவட்ட பிஷப் ரேமண்ட் விக்ரமசிங்க நடத்தினார்.
தமிழ்நாடு சிவகங்கை மறைமாவட்ட VG Fr.ஜோசப் லூர்து ராஜா மற்றும் யாழ்ப்பாண பிஷப் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் தமிழ் திருப்பலி நடத்தினர்.
இப்புனித நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கவுன்சில் ஜெனரல் ஷங்கர் பாலச்சந்திரன், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை கவுன்சில் ஜெனரல் எம்.கிருஷ்மமூர்த்தி, முன்னாள் பாதுகாப்புப் பணியாளர் தலைமை நிர்வாகி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரியர் அட்மிரல் ஜெயந்தா டி சில்வா (ஓய்வு), துணைப் படைத் தளபதியும், வடக்கு கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் கபிலா சமரவீரா, பாதுகாப்புப் படைத் தளபதி யாழ்ப்பாணம் மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரியா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கே.மகேசன், மூத்த கடற்படை அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஏராளமான முத்தரப்பு மற்றும் போலிஸ் பணியாளர்கள். இது தவிர, சுமார் 10,000 இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் சகோதரிகள் உட்பட கத்தோலிக்க பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
-என்.வசந்த ராகவன்.