ஓடும் பேருந்தில் படிக்கட்டில் நின்றபடி செல்போனில் பேசியவர் தவறி விழுந்து படுகாயம்!-இரவு நேரத்தில் நடந்த பயங்கரம்.

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சேதுராப்பட்டியிலிருந்து,  ராம்ஜி நகர் வழியாக மத்திய பேருந்து நிலையம் நோக்கி நேற்று இரவு 10 மணிக்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில், படிக்கட்டில் நின்றபடி செல்போனில் யாரிடமோ பேசியக்கொண்டு வந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர், திருச்சி பொன்நகர் அருகே அந்த பேருந்து சென்றுகொண்டிருந்த போது நிலை தடுமாறி ஓடும் பேருந்தில் இருந்து தவறி சாலையில் விழுந்து படுகாயமடைந்தார்.

அருகில் இருந்த நபர்கள் அவரை மீட்டு,  சாலையின் ஓரத்திற்கு கொண்டு வந்தனர். அந்த நபரின் தலையின் பின் பகுதி சேதமடைந்து இரத்தம் பீறிட்டு அடித்தது. ஈரத்துணியால் காயமடைந்த பகுதியை இருக்கமாக கட்டினார்கள். இருந்தாலும் இரத்தக் கசிவு நிற்கவில்லை.

இந்நிலையில், அந்த நேரம் திருச்சி பொன்நகர் பகுதியில் ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்த கண்டோண்மென்ட் காவல்நிலைய போலிசார், உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து, அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த நபரின் பெயர்  குறளரசன், அவர் மது அருந்தவில்லை. இவர் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். திருச்சி நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழமாதேவி பகுதியில் வசித்து வருகிறார் என்பது, கண்டோண்மென்ட் காவல் நிலைய போலிசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

செல்போனால் வந்த வினைதான் இந்த சீரழிவிற்கு காரணம்.

-டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

Leave a Reply