கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அதன்படி மன்னார் கிரஞ்சி பகுதியில் உள்ள காகதீவில் இலங்கை கடற்படை மற்றும் கலால் அலுவலக அதிகாரிகள் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 142 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா கேரளாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 75 நாட்களில் மட்டும் இதுவரை 2000 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
-என்.வசந்த ராகவன்.