Loading...
தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வு கூடங்களில் “கொரோனா வைரஸ்” குறித்த பரிசோதனைக்கு அதிகபட்சமாக ரூ.4,500/- என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதாவது, அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு ஆரம்பக்கட்ட சோதனைக்கு ரூ.1,500/–ம், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தும் சோதனைக்கு ரூ.3000/-ம் வசூலிக்க வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இலவசமாகவோ அல்லது நிர்ணயித்த அளவைவிட குறைந்த கட்டணத்திலோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், ரத்த மாதிரிகளை பெற்ற நபர்களின் விவரங்களையும், ஆய்வு முடிவுகளையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் தெரிவிக்க வேண்டும் என கட்டுபாடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
-டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Great