இன்று உலகத்தையே வியக்க வைக்கும் 2018-ல் “மங்கையர் மலர்” இதழில் வெளிவந்த ஆயுர்வேத மருத்துவ கட்டுரை!

“கல்கி” குழுமத்தின் சார்பில் மாதமிருமுறை வெளிவரும் “மங்கையர் மலர்” இதழில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 -ந்தேதி வெளிவந்த “மங்கையர் மலர்” இதழில் பக்கம் 30-31-ல் “தொண்டை தொல்லை இனி எப்போதும் இல்லை!”-என்ற தலைப்பில் எனது ஆயுர்வேத மருத்துவ கட்டுரை வெளிவந்தது.

அதில் இன்று உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி கோரத்தாண்டவமாடிவரும்  “கொரோனா வைரஸ்” தொற்றுக்கான ஒத்த அறிகுறிகளுக்கு ஏற்ற ஆயுர்வேத மருந்து, உணவு பழக்க வழக்கம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவாக நான் விளக்கம் அளித்துள்ளேன்.

சீனாவில் வுஹான் மாகாணத்தில் “கொரோனா வைரஸ்” தொற்றுப் பரவுவதற்கு 16 மாதங்களுக்கு முன்பாகவே இந்த ஆயுர்வேத மருத்துவ கட்டுரை “மங்கையர் மலர்” இதழில் வெளிவந்துள்ளது. இந்த ஆயுர்வேத மருத்துவ கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தும் இன்று உலகத்தையே வியக்க வைத்துள்ளது.

அந்த ஆயுர்வேத மருத்துவ கட்டுரையின் முழு தொகுப்பையும், நமது வாசகர்களின் பார்வைக்காகவும், நமது மத்திய, மாநில அரசு மற்றும் ஆட்சியாளர்களின் கவனத்திற்காகவும் இங்கு பதிவு செய்துள்ளோம்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Dr.துரைபெஞ்சமின், மருத்துவ சுவடிகள் ஆய்வாளர், Ex. Honorary A.W.Officer, Govt Of India,

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறாரா? என்பதை முகத்தைப் பார்க்காமலையே, அவர் குரலை (பேச்சை) வைத்தேக் கண்டுப் பிடித்து விடலாம்.

உதானம் என்றால் மேலே நோக்குதல் என்று அர்த்தம். உடலில் தலையே பிரதானம். அதைத் தாங்கிப்பிடிப்பது கழுத்து. இந்தக் கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். அதாவது, கீழிருந்து மேல்நோக்கி வருவது ஏப்பம், வாந்தி, குமட்டல், கபம், சளித் தொந்தரவு, விக்கல் போன்ற பிரச்னைகளாகும்.

சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும் போது “வைரஸ்” தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும் போது “பாக்டீரியா” தொற்றும் உண்டாகிறது.

பொதுவாக பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும், தூசு, மகரந்தத் துகள்களால் ஏற்படும் ஒவ்வாமையின் காரணமாகவும், கிருமிகள் தொற்றினாலும் தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, தொண்டைக் கட்டு, மூக்கு ஒழுகல், காய்ச்சல், குளிர் காய்ச்சல்… போன்ற தொந்தரவுகள் ஏற்படும். சளி, எச்சில் மற்றும் கைகள் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவும். நோய் கடுமையாகி மூச்சுக் குழலில் தொற்று உண்டாகி, வீக்கத்தால் காற்றுப்பாதை அடைபடலாம். இதனால் மூச்சு விடுவது மற்றும் விழுங்குவது இரண்டுமே சிரமமாகும். கடும் தலைவலி மற்றும் அதிக காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

தொண்டைக்கட்டு மற்றும் தொண்டை வலி வருவதை தடுக்க கண்டிப்பாக சாலையோரங்களில் விற்கும் சுகாதாரமற்ற குளிர்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். தண்ணீர், குளிர்பானம், ஐஸ்கிரீம் எதுவாக இருந்தாலும் சாப்பிடும் முன்னர் அதன் சுத்தத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

தொண்டையில் நோய் தொற்று இருக்கும் பட்சத்தில், இதமான சூட்டில் தண்ணீர், சூப் போன்ற சுத்தமான திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் சளி மென்மையாகி எளிதில் வெளியேறும். கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். இது தொண்டைக்கு இதமளிப்பதுடன் சளி வெளியேறவும் உதவும். இந்த மாதிரியான நேரங்களில் பேச்சைக் குறைப்பது அவசியம். அசுத்தக் காற்றை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும். புகைபிடித்தலை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். காய்ச்சல், ஜலதோஷம் இருக்கும் பட்சத்தில் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது முக்கியம். கைகளால் முகத்தைத் துடைப்பதை தவிர்க்கலாம்.

தொண்டை வலி இருக்கும் பட்சத்தில் சூடான மற்றும் காரமான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்தல் மற்றும் வெந்நீரில் குளிப்பது அவசியம். குளிர் பானம், நெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி, பால், மோர் ஆகியவற்றை தவிர்க்கவும். சர்க்கரை சேர்த்த இனிப்பு பதார்த்தங்களையும் சாப்பிட வேண்டாம். இதனால் இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கொள்ளு மற்றும் தூதுவளை இரசம் தொண்டைக்கட்டு, சளி, இருமல், ஊளைச்சதை, உடல் பருமன் ஆகியவற்றை குணமாக்கும். தொண்டையில் பரவும் நோய் தொற்றையும் தடுக்கும்.

இஞ்சி சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் தொண்டைக்கட்டு, சளி, இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் குணமாகும்.

இஞ்சியுடன் தேன், லவங்கப் பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டைக்கட்டு, தொண்டை கரகரப்பு நீங்கும்.

ஆடாதொடா வேரை இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலையில் தேய்த்துக் குளித்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு, தலைவலி நீங்கும்.

ஆடாதொடா இலை, வேர் சம அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் இருமல், காய்ச்சல் குணமாகும்.

கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டைக்கட்டு, தொண்டை வலி குணமாகும்.

கிராம்பை நீர் சேர்த்து மை போல அரைத்து நெற்றி, மூக்கில் பற்றுப் போட்டால் தொண்டைக்கட்டு, மூக்கடைப்பு குணமாகும்.

திரி கடுகு சூரணம் (சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும்) இதனை தினமும் 1-2 கிராம் அளவு காலை, மாலை என இருவேளையும் உண்டு வர தொண்டைக்கட்டு, இருமல், ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுவலி, வயிறு உப்பிசம், பசியின்மை, தொண்டை வலி மற்றும் தொண்டைப்புண் ஆகியவை குணமாகும்.

திப்பிலி முக்கியமாக தொண்டைக்கட்டு, இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி, உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 டீஸ்பூன் அளவு காலை, மாலை என இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய், நீங்கும். திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, முப்பிணி நீங்கும்.

வாரத்திற்கு இருமுறை சிறிது அளவு அதிமதுரத்தை நேரடியாகவோ (அல்லது) தேன் கலந்தோ உட்கொண்டு வந்தால் குரல் இனிமையாக இருக்கும். மேலும், தொண்டை கரகரப்பு, தொண்டை வறட்சி, தொண்டைக் கட்டு, வறட்டு இருமல் ஆகியவற்றையும் குணமாக்கும். அதனால்தான் அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆசாரியர் சுஸ்ருதர் அதிமதுரத்தை அதிமுக்கியமான மூலிகையாக குறிப்பிட்டு இருக்கிறார்.

பொதுவாக அதிமதுரம் ஒரு ‘நிதானமான’ மலமிளக்கியாகவும்.  சுவாச குழாய்களில்  கபம் முதலியவற்றைப் போக்கி, ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு முக்கிய மருந்தாகவும் பயன்படுகிறது.

டாக்டர்.துரைபெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY.,

 மருத்துவ சுவடிகள் ஆய்வாளர்,

Ex. Honorary A.W. Officer, Govt. of India,

Mobile No. 98424 14040.

E-mail:ullatchithagaval@gmail.com

 முக்கிய குறிப்பு: 

மத்திய, மாநில ஆட்சியாளர்களின் கவனத்திற்கு: “கொரோனா வைரஸ்” தொற்று அறிகுறிகளுக்கு ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் ஏராளனமான மருந்துகள் இருக்கிறது. எனவே, கீழ்காணும் மருந்துகளை பயன்படுத்துங்கள் நிச்சயம் குணமாகும்.

“கொரோனா வைரஸ்” தொற்று அறிகுறிகளுக்கு ஆயுர்வேத மருந்துகள்:

“கொரோனா வைரஸ்” தொற்று அறிகுறிகளுக்கு சித்த  மருந்துகள்:

டாக்டர்.துரைபெஞ்சமின்.

One Response

  1. MANIMARAN March 30, 2020 11:59 am

Leave a Reply