“கொரோனா வைரஸ்” தொற்றால் உலகம் முழுவதும் ஒட்டுமொத்த மனித குலமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்வதற்கு, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நோயை குணப்படுத்துவதை விட, இந்த நோய் தொற்று ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதன் மூலமும், உடம்பை ஆரோக்கியமாக பராமரிப்பதன் மூலமும் நோய் தொற்று நம்மை அணுகாமல் பார்த்துகொள்ள முடியும் என்று ஆயுர்வேத மருத்துவம் வலியுறுத்துகிறது என்றும், “கொரோனா வைரஸ்” அறிகுறிகளுக்கு ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இருக்கிறது என்றும், தொடர்ந்து பல ஆயுர்வேத மருத்துவ கட்டுரைகளை ஆதாரப்பூர்வமாக நாம் வெளியிட்டோம். அவற்றை பாரத பிரதமர் நரேந்திரமோதி மற்றும் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆகியோரின் தனிப்பட்ட கவனத்திற்கும் மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து அனுப்பியும் வைத்தோம்.
இந்நிலையில், பாரத பிரதமர் நரேந்திரமோதி போர்கால அடிப்படையில் எடுத்த அதிரடி நடவடிக்கையின் விளைவாகவும், “ஆயுஷ்” அமைச்சக அதிகாரிகளுக்கு அவர் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும், இந்திய அரசின் முக்கிய அங்கமாக விளங்கும் “ஆயுஷ்” அமைச்சகம் “கொரோனா வைரஸ்” தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ளவும், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திகொள்ளவும், ஒரு சில சுய பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும், உணவு பழக்க வழக்கங்களையும் மற்றும் சில ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும், ஒரு சில மருந்துகளையும் “ஆயுஷ்” அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், உலக மக்கள் அனைவரின் நன்மைக்காகவும், குறிப்பாக நமது வாசகர்களின் பார்வைக்காகவும், அதை இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.
Immunity Boosting - AYUSH Advisory
I.பொதுவான நடவடிக்கைகள்:
1.தாகத்திற்கு நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும்.
2.தினசரி காலை அல்லது மாலை நேரத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் யோகாசனம், மூச்சு பயிற்சி மற்றும் தியானம் செய்வது நல்லது.
3.மஞ்சள், சீரகம், கொத்தமல்லி மற்றும் பூண்டு ஆகியவற்றை உணவில் (சமையலில்) தேவையான அளவு பயன்படுத்த வேண்டும்.
II.நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஆயுர்வேத மருந்துகள்:
1.காலையில் ஆகாரத்திற்கு முன்பு (அல்லது) பின்பு சியவன்பிராஷ் லேகியம் -Chyawanprash Lehyam – 1 டீஸ்பூன் அளவு (10 கிராம்) எடுத்துக்கொள்ளுங்கள். நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகள் சர்க்கரை இல்லாத சியவன்பிராஷ் லேகியத்தை பயன்படுத்துங்கள். இது அனைத்து ஆயுர்வேத மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
Benefits of Chyawanprash Lehyam
சியவன்பிராஷின் நன்மைகள்:
Rejuvenates all tissues in the body*
Supports overall strength and energy*
Promotes muscle mass*
Builds ojas for supporting a healthy immune response and youthfulness*
Supports healthy function of the heart and respiratory systems*
Tonifies the reproductive system*
Kindles agni (digestive fire)*
Gently encourages elimination*
Supports optimal urinary health*xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
2.துளசியில் இருந்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீர், காபி & கசாயம் குடிக்கவும்.
மூலிகை டீ அல்லது கசாயம் எப்படி தயாரிப்பது?
துளசி, இலவங்கப்பட்டை, கரும் மிளகு, உலர் இஞ்சி, உலர் திராட்சை, தேவைப்பட்டால் உங்கள் சுவைக்கு எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் வெல்லம் (அல்லது) நாட்டு சர்க்கரை பயன்படுத்தி தயாரித்து ஒரு நாளைக்கு ஒரு முறை (அல்லது) இரண்டு முறை குடிக்கவும்.
3. 150 மில்லி சூடான பசும் பாலில் அரை டீ ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் கலந்து, ஒரு நாளைக்கு ஒரு முறை (அல்லது) இரண்டு முறை அருந்தவும்.
III. எளிய ஆயுர்வேத நடைமுறைகள்:
1.நாசி (மூக்கு) பயன்பாட்டிற்கு: நல்லெண்ணெய் (எள் எண்ணெய்) (அல்லது) தேங்காய் எண்ணெய் (அல்லது) நெய் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை இரண்டு நாசியிலும் தேவையான அளவு காலையிலும், மாலையிலும் (நஸ்யமிடவும்) தடவவும்.
2.எண்ணெய் கொப்பளிக்கும் சிகிச்சை: 1 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் (எள் எண்ணெய்) (அல்லது) தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி (குடிக்க வேண்டாம்) 2 முதல் 3 நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளித்து அதை கீழே துப்பிவிட்டு, வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்கவும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை (அல்லது) இரண்டு முறை செய்யலாம்.
IV. வறட்டு இருமல், தொண்டை புண் இருக்கும் போது:
1.பச்சை புதினா இலைகள் (அல்லது) சீரகம் இவற்றில் ஏதாவது ஒன்றை கொதிக்க வைத்து நீராவியை உள்ளிக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை செய்யலாம்.
2.இருமல் (அல்லது) தொண்டை எரிச்சல் ஏற்பட்டால் கிராம்பு தூளை நாட்டு சர்க்கரை (அல்லது) தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை எடுத்துக்கொள்ளலாம்.
3.இதற்கு பிறகும் இந்த அறிகுறிகள், தொந்தரவுகள் தொடர்ந்தால் மருத்துவர்களை அணுகுவது நல்லது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
மருத்துவ சுவடிகள் ஆய்வாளர்,
Ex. Honorary A.W. Officer, Govt. of India
ullatchithagaval@gmail.com