கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்!-தமிழ் வருட பொதுப் பலன்கள்!-உள்ளது உள்ளபடி..!

இடைக்காட்டுச் சித்தர்.

ஆண்டுகள் -60

எண்     பெயர்                          வருடம்

1              பிரபவ                       1987-1988

2              விபவ                         1988-1989

3              சுக்ல                          1989-1990

4              பிரமோதூத             1990-1991

5              பிரசோற்பத்தி       1991-1992

6              ஆங்கீரச                   1992-1993

7              ஸ்ரீமுக                         1993-1994

8              பவ                               1994-1995

9              யுவ                              1995-1996

10           தாது                             1996-1997

11           ஈஸ்வர                         1997-1998

12           வெகுதானிய            1998-1999

13           பிரமாதி                       1999-2000

14           விக்கிரம                      2000-2001

15           விஷூ                            2001-2002

16           சித்திரபானு               2002-2003

17           சுபானு                           2003-2004

18           தாரண                          2004-2005

19           பார்த்திப                     2005-2006

20           விய                                2006-2007

21           சர்வசித்து                   2007-2008

22           சர்வதாரி                    2008-2009

23           விரோதி                       2009-2010

24           விக்ருதி                        2010-2011

25           கர                                   2011-2012

26           நந்தன                          2012-2013

27           விஜய                            2013-2014

28           ஜய                                 2014-2015

29           மன்மத                         2015-2016

30           துன்முகி                     2016-2017

31           ஹேவிளம்பி             2017-2018

32           விளம்பி                       2018-2019

33           விகாரி                         2019-2020

34          சார்வரி                       2020-2021

35           பிலவ                           2021-2022

36           சுபகிருது                   2022-2023

37           சோபகிருது              2023-2024

38           குரோதி                       2024-2025

39           விசுவாசுவ                 2025-2026

40           பரபாவ                        2026-2027

41           பிலவங்க                     2027-2028

42           கீலக                              2028-2029

43           சௌமிய                      2029-2030

44           சாதாரண                   2030-2031

45           விரோதிகிருது         2031-2032

46           பரிதாபி                       2032-2033

47           பிரமாதீச                     2033-2034

48           ஆனந்த                         2034-2035

49           ராட்சச                           2035-2036

50           நள                                   2036-2037

51           பிங்கள                           2037-2038

52           காளயுக்தி                    2038-2039

53           சித்தார்த்தி                  2039-2040

54           ரௌத்திரி                    2040-2041

55           துன்மதி                         2041-2042

56           துந்துபி                          2042-2043

57           ருத்ரோத்காரி            2043-2044

58           ரக்தாட்சி                      2044-2045

59           குரோதன                     2045-2046

60           அட்சய                           2046-2047


கடந்த கால பலன்கள்:

விகாரி ஆண்டு (2019-ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2020 ஏப்ரல் 13-ந்தேதி வரை) பொது பலன்கள்:

பார் விகாரிதனிற் பாரணநீ ருங்குறையும்

மாரியில்லை வேளாண்மை மத்திமமாம் சோரர்

பயமதிக முண்டாம் பழையோர்கள் சம்பாத்

தியவுடைமை விற்றுண்பார் தேர்.

விளக்கம்:

அதாவது, விகாரி ஆண்டில் நாடெங்கும் நல்ல மழை பெய்யாது, தண்ணீர் பஞ்சம் ஏற்படும். வயல்களில் விளைச்சல்கள் மத்திமமாகும். மக்களுக்கு திருடர் பயம் அதிகம் உண்டகும். பூர்வீக சொத்துகளை விற்று ஜீவனம் நடத்த வேண்டிய சூழல் உருவாகும்.

    ————————————————————————-

நிகழ்கால பலன்கள்:

சார்வரி ஆண்டு (2020-ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2021 ஏப்ரல் 13-ந்தேதி வரை) பொது பலன்கள்.

சாருவரி யாண்டதனிற் சாதிபதி னெட்டுமே

தீரமறு நோயாற் றிரிவார்கள் மாரியில்லை

பூமிவிளை வில்லாமற் புத்திரரு மற்றவரும்

ஏமமின்றிச் சாவா ரியம்பு

விளக்கம்:

அதாவது, சாருவரி ஆண்டில் அனைத்து தரப்பு மக்களும் வீரம் அற்றுபோய் நோயுற்று திரிவார்கள். மழையில்லை, பூமியில் விளைச்சலும் இல்லாமல், குழந்தைகளும், மற்றவர்களும் வயிற்றுக்கு உணவு இன்றி இறப்பார்கள்.

       ————————————————————————

எதிர்கால பலன்கள்:

பிலவ ஆண்டு (2021-ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2022 ஏப்ரல் 13-ந்தேதி வரை) பொது பலன்கள்: 

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்

சலமிகுதிதுன்பந்  தருக்கும் நலமில்லை

நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை

பாலுமின்றிச் செயபுவனம் பாழ்

விளக்கம்: 

அதாவது, பிலவ ஆண்டில் மழை குறைவாக பெய்யும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு துன்பம் அதிகரிக்கும், அதனால் அதிகம் கோபம் கொள்வர், மக்களுக்கு நலமில்லை. ஆடு, மாடு உள்பட நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்கள் பெருமளவில் மடியும். உணவும், பாலும் இன்றி உலகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

ஆதாரம்:- இடைக்காட்டுச் சித்தரின்-“அறுபது வருட வெண்பா”.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
மருத்துவ சுவடிகள் ஆய்வாளர்,
ullatchithagaval@gmail.com

.

One Response

  1. MANIMARAN April 14, 2020 10:53 pm

Leave a Reply