கொரோனா வைரஸ் (SARS-CoV-2) காற்றின் வழியாகவும் பரவும்! -சீன விஞ்ஞானிகளின் அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை!

SARS-CoV-2 RNA .

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [1.55 MB]

கொரோனா வைரஸ் (COVID-19) Severe acute respiratory syndrome coronavirus 2 (SARS-CoV-2) தொற்று உலக அளவில் வேகமாக பரவியுள்ளது. மனித சுவாச நீர்த்துளிகள் மற்றும் நேரடி தொடர்பு வழியாக SARS-CoV-2 பரவுவது தெளிவாக இருந்தாலும், காற்றில் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.

இந்த ஆய்வு பிப்ரவரி மற்றும் மார்ச் 2020-ல் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று வெடித்தபோது இரண்டு வுஹான் மருத்துவமனைகளின் வெவ்வேறு பகுதிகளில் ஏரோசோல்களில் வைரஸ் ஆர்.என்.ஏவை அளவிடுவதன் மூலம் SARS-CoV-2 இன் ஏரோடைனமிக் தன்மையை ஆய்வு செய்தது.

கண்டறியப்பட்ட ஏரோசோல்களில் SARS-CoV-2 RNA இன் செறிவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ள மருத்துவமனைகளின் தனிமைப்படுத்தும் வார்டுகள் மற்றும் காற்றோட்டமான நோயாளி அறைகளில் மிகக் குறைவாக இருந்தன,

ஆனால், அதேசமயம், நோயாளிகளின் கழிப்பறை போன்ற வெளிக்காற்று வசதியற்ற இடங்களில், அடர்த்தி அதிகமாக இருந்தது. மருத்துவமனைக்குள்ளும், வெளியிலும், அதிகமானோர் நடமாட்டம் காரணமாக SARS-CoV-2  மூலக்கூறு அணு அதிகம் காணப்பட்டது.

கூட்டத்திற்கு வாய்ப்புள்ள இரண்டு பகுதிகளைத் தவிர, பெரும்பான்மையான பொதுப் பகுதிகளில் வான்வழி SARS-CoV-2 ஆர்.என்.ஏவின் அளவைக் கண்டறிய முடியவில்லை.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பாதுகாப்பு ஆடைகளை அகற்றி, வேறு உடைகளை அணியும் அறைகளில்,  SARS-CoV-2  மூலக்கூறு அணுவின் அடர்த்தி அதிகமாக காணப்பட்டது. பாதுகாப்பு ஆடைகளில் ஒட்டியிருக்கும் அணு உதிர்ந்து, மீண்டும் காற்றில் கலந்ததுதான் இதற்கு காரணம் என கருதப்படுகிறது.

அதனால் கொரோனா வைரஸ் SARS-CoV-2  காற்றின் வழியாக பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கலாம் என்று நாங்கள் முன்மொழிகிறோம்.

காற்றோட்டமான அறை,  திறந்தவெளி, பாதுகாப்பு ஆடைகளின் சுத்திகரிப்பு மற்றும் கழிப்பறை பகுதிகளை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல் ஆகியவை காற்றில் SARS-CoV-2 RNA இன் செறிவை திறம்பட மட்டுப்படுத்தும் என்பதை எங்கள் முடிவுகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு, அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
மருத்துவ சுவடிகள் ஆய்வாளர்,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply