மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஒரே உத்தரவில் லாட்டரி சீட்டை ஒழித்ததைப் போல!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கு உடனே உத்தரவிட வேண்டும்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  

கொரோனா பரவலுக்கு இடையே தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து, பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் மே 7-ந்தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [96.90 KB]

இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரி, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [183.01 KB]

இந்நிலையில் 43 நாட்களுக்கு பின்னர், சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நேற்று ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்பட்டன.

இது தமிழக காவல்துறைக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த தமிழக காவல்துறையினர், நேற்று முதல் டாஸ்மாக் கடைகளை காவல் காக்க வேண்டிய கட்டாயமும், குடிகாரர்களிடம் போராட வேண்டிய நிர்பந்தமும் உண்டானது.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையின் போது, மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என நீதிபதியின் முன்பு வீடியோ மற்றும் படங்களை ஆதாரங்களாக சமர்ப்பித்தனர். இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பொது முடக்கம் முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும், மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 43 நாட்களாக கொரோனா பரவல் தடுப்பு பணியில் தமிழக அரசு சம்பாதித்து வைத்திருந்த ஒட்டுமொத்த நல்ல பெயரையும், டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்ததின் மூலம், நேற்று ஒரே நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் தன் செல்வாக்கை தமிழக அரசு இழந்து விட்டது. இந்த உண்மையை தமிழக உளவுதுறை அதிகாரிகள் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கவனத்திற்கு தெரிவித்தார்களா? என்பது எனக்கு தெரியாது.

ஆனால், மக்களின் நாடித்துடிப்பை நன்கு உணர்ந்த ஒரு ஊடகக்காரன் என்ற முறையில், இந்த உண்மையை வெளிப்படையாக இங்கு நான் பதிவு செய்வதை என் கடமையாக  கருதுகின்றேன்.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஒரே உத்தரவில் லாட்டரி சீட்டை” ஒழித்ததைப் போல, அம்மாவின் வழியில் ஆட்சி செய்வதாகச் சொல்லும் தற்போதைய தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, ”டாஸ்மாக் கடைகளை” நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கு உடனே உத்தரவிட வேண்டும். 

இந்த வருவாய் இழப்பை ஈடு செய்ய டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் விவசாய இடுபொருள் மற்றும் விவசாய விளைப் பொருள் விற்பனை மையங்களாக செயல்படுவதற்கு உத்தரவிட வேண்டும். 

இதன் மூலம் தமிழக விவசாயிகள் அனைவரும் உங்களை தலையில் வைத்து நிச்சயம் கொண்டாடுவார்கள். உங்கள் பெயர் தமிழக அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் நிச்சயம் பொறிக்கபடும். மேலும், தமிழக மக்கள் மனதில் நிரந்தரமான ஒரு இடத்தை நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

உங்களுடைய அரசியல் எதிர்காலம் மட்டுமல்ல! தமிழக மக்களின் எதிர்காலமும் இதில்தான் அடங்கியுள்ளது.

நாட்டு மக்களுக்கு நல்ல முடிவை விரைவில் அறிவிப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன்.

 

One Response

  1. MANIMARAN May 9, 2020 10:51 am

Leave a Reply