மதுக்கடைகளை காவல் காக்கும் பணியில் காவல்துறையினரை ஈடுப்படுத்தக் கூடாது!

கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வந்த சூழலில் தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து, பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ (TAMIL NADU STATE MARKETING CORPORATION LTD) மதுபான கடைகள் மே 7-ந்தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரி, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று மே 7-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு விசாரணையின் போது, மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என நீதிபதியின் முன்பு வீடியோ மற்றும் படங்களை ஆதாரங்களாக சமர்ப்பித்தனர்.

இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் மே 8-ம் தேதி உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும், மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனால் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன.

இந்நிலையில், மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவின் மீது இன்று (மே 15) உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

இதையடுத்து (மே 16) மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

இது தமிழக காவல்துறைக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த தமிழக காவல்துறையினர், நாளை முதல் டாஸ்மாக் கடைகளை காவல் காக்க வேண்டிய கட்டாயமும், குடிகாரர்களிடம் போராட வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

எனவே,  மதுக்கடைகளை காவல்  காக்கும் பணியில் காவல்துறையினரை தமிழக அரசு ஈடுப்படுத்தக் கூடாது. அது காவல்துறையினரின் கண்ணியத்திற்கு கலங்கத்தை உண்டாக்கும்.

மேலும், சாராயக் கடைக்கு (தீமைக்கு) காவல்துறையினர் துணைப்போவதாக அப்பாவி மக்கள் தவறாக புரிந்துக் கொண்டு காவல்துறையினரோடு மோதலில் ஈடுபடுவார்கள். இதில் தங்களைத் தற்காத்து கொள்வதற்காக காவல் துறையினர் தடியடியோ (அல்லது) தாக்குதலிலோ  ஈடுபட வேண்டிய நிர்பந்தம் நிச்சயம் உண்டாகும். இவையெல்லாம், கடந்த காலங்களிலும் நடைப்பெற்றுள்ளது. இவையெல்லாம் நாளை நடக்காது என்பதற்கு எந்த உத்ரவாதமும் இல்லை. மேலும், கம்பீரமிக்க நமது காவல்துறையினரை, குடிகாரர்களின் பாதுகாப்பிற்காக பணி அமர்த்துவது, ”மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதற்கு சமம்”.

குற்றப் பின்னனிக் கொண்ட நபர்களால் மட்டும்தான் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளை பாதுகாக்க முடியும். தமிழக காவல்துறையினருக்கு சத்தியமாக இது சரிப்பட்டு வராது.

அதற்கு என்றே தனியாக பல தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகள் நாட்டில் இருக்கிறார்கள். எனவே, அவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தலாம். (அல்லது) ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளின் பாதுகாப்பை TAMIL NADU STATE MARKETING CORPORATION LTD நிர்வாகத்தின் முடிவுக்கே விட்டுவிடலாம்.

எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும், தன்னை நம்பியுள்ள மக்களுக்கு முடிந்தவரை சேவைதான் செய்ய வேண்டுமே தவிர, வணிகம் செய்ய நினைக்கக் கூடாது.

ஆனால், மதுக்கடைகளை குடிகாரர்கள் மறந்தாலும், தமிழக அரசு அதை மறப்பதாகத் தெரியவில்லை. ‘சாராயம் விற்பது அரசின் கொள்கை முடிவு! டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக இழுத்து மூடினால் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படும்‘.-என்று வெளிப்படையாகவே அரசு கூறுவதை, மனசாட்சியுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

“தலை அரிக்கிறது என்பதற்காக கொள்ளிக் கட்டையை எடுத்து சொறிந்துக் கொண்ட கதையாகதான் இருக்கிறது தமிழக அரசின் இந்த முடிவு”.

இப்போதும் ஒன்றும் காலம் கடந்து விட வில்லை, எத்தனை அரசியல் நிர்பந்தங்கள் இருந்தாலும் சரி, எத்தகைய வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் சரி, ஏன் ஆட்சி அதிகாரமே இதனால் பறிபோனாலும் பரவாயில்லை, ‘தமிழக மக்களின் நலன் கருதி டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக இழுத்து மூட உத்தரவிடுகிறேன்’.- என்று தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவித்தால், அவரது பெயர் தமிழக அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் நிச்சயம் பொறிக்கபடும். தமிழக மக்கள் மனதில் நிரந்தரமான ஒரு இடத்தை நிச்சயம் அவரால் பெற முடியும்.

மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழ்வதற்கு இதுவரை எந்த தலைவனுக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

இதை ஏற்பதும், மறுப்பதும் அவரது முடிவிற்கே விட்டுவிடுகின்றேன்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

One Response

  1. MANIMARAN May 16, 2020 10:34 am

Leave a Reply