அதி தீவிரமடைந்துள்ள ”ஆம்பன்’’ புயல் நாளை (மே 20) மாலை மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கிடையே கரையைக் கடக்கும் என, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அப்போது 155 முதல் 185 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளுக்கு புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Video Conference on Coronavirus, Cyclone Amphan & migrant workers' situations with District MagistratesVideo Conference on Coronavirus, Cyclone Amphan & migrant workers' situations with District Magistrates
Posted by Mamata Banerjee on Tuesday, 19 May 2020
இந்நிலையில் ”ஆம்பன்’’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com