குளத்து நீரை வெளியேற்றி சட்ட விரோதமாக மீன் பிடிக்கும் நபர்கள்!-திருச்சி மாநகராட்சி கொக்கரசம் பேட்டையில் நடக்கும் அநியாயம்.

திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, 63 -வது வார்டு, கொக்கரசம் பேட்டையில் 40 சென்ட் நிலப்பரப்பில், மாநகராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்து நீரை நம்பிதான் அப்பகுதி கால்நடைகள் உள்ளன. சுட்டெரிக்கும் இந்த கோடைக்காலத்தில் இந்த குளத்து நீர்தான் அப்பகுதிக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், அந்த குளத்து நீரை வெளியேற்றி சட்ட விரோதமாக மீன் பிடிக்கும் வேலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த குளத்தில் மீன் பிடிக்க யாருக்கும் குத்தகை உரிமம் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து கொக்கரசம் பேட்டை பொதுமக்கள் சார்பாக M.பன்னீர்செல்வம் என்பவர், திருச்சி மாநகராட்சி ஆணையருக்கும், திருச்சி மாநகராட்சி தலைமைப் பொறியாளருக்கும் மற்றும் 63-வது வார்டு இளநிலைப் பொறியாளருக்கும் பல முறை எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளார். ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து நீர் நிலையை பாதுகாப்பார்களா?-பொறுத்திருந்துப் பார்ப்போம்.

-கே.பி.சுகுமார்.

One Response

  1. MANIMARAN May 19, 2020 11:34 pm

Leave a Reply