காற்று மழையினால் மண் பாதையில் முறிந்து கிடக்கும் மரங்கள்..!-ஏற்காடு அருகே வீட்டில் முடங்கி கிடக்கும் மலைக் கிராம மக்கள்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில், மழையினால் மலைக்கிராம பாதையில் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஏற்காடு டவுன் பகுதியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கூத்துமுத்தல் கிராமத்திலிருந்து 6.5 கி.மீ மண்பாதை வழியாக மேல் கோவிலூர் மற்றும் தாழ் கோவிலூர் கிராமங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு 200- க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

ஏற்காட்டில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மழையுடன் கூடிய பலத்த காற்றும் வீசியது. இதனால் கோவிலூர் செல்லும் மண்பாதையின் பல்வேறு இடங்களில் மூங்கில், நாகை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

இது மண்பாதை என்பதால், பாதை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் மலைக்கிராம மக்கள் முடங்கிக்கிடக்கின்றனர்.

-நே.நவீன் குமார்,

Leave a Reply