குஜராத் மாநில கிர் வனப்பகுதியில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகப் புகழ் பெற்ற தனித்தன்மை வாய்ந்த ஆசிய சிங்கங்களுக்கான கிர் தேசியப் பூங்கா (Gir Forest National Park) குஜராத் மாநிலத்தின், சௌராட்டிர தீபகற்பத்தில், கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது.

1,412 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள் உள்ளன. மே 2015 மேற்கொண்ட 14-வது ஆசியச் சிங்கங்களின் கணக்கெடுப்பின்படி, கிர் தேசியப் பூங்காவில் 523 சிங்கங்கள் கணக்கெடுக்கப்பட்டது. அவைகளில் ஆண் சிங்கங்கள் 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் இளஞ்சிங்கங்கள் 213 ஆக உள்ளது.

அவற்றின் எண்ணிக்கை தற்போது கிட்டத்தட்ட 29 சதவீதம் அதிகரித்துள்ளது. இது புவியியல் ரீதியாக 36 சதவீதம் உயர்ந்துள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்
Ex.Honorary Animal Welfare Officer, Government of India. ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN June 13, 2020 10:38 pm

Leave a Reply