கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று (ஜீன்15) இரவு இந்திய வீரர்களுக்கும், சீன இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 இந்திய இராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர்.
இதில் தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் பழனி என்பவர், நமது இந்திய எல்லையை பாதுகாக்கும் பணியில் தன் இன்னுயிரை இழந்துள்ளார்.
அதேபோல், தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கர்னல் பி சந்தோஷ் பாபு என்பவர் உள்பட மொத்தம் 3 இந்திய இராணுவத்தினர் வீர மரணம் அடைந்துள்ளனர்.
நமது இந்திய வீரர்கள் தாக்கியதில் 5 சீன இராணுவத்தினர்பலியானதோடு, 11 சீன வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால் இந்திய-சீன எல்லையில் பதட்டமானச் சூழல் நிலவுகிறது.
-Dr.DURAI BENJAMIN.
ullatchithagaval@gmail.com
Hearty console to IN OUR INDIAN ARMY MAN’S PASSED AWAY, JAI HIND…….