அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனாத் தொற்று இல்லை!-இதோ பரிசோதனை முடிவின் உண்மை நகல்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். (File Photo)

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உடல் நல பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிவையில், அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பதாக காட்டுத் தீ போல அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும் மற்றும் சமூக ஊடகங்களிலும் ஆதாரம் இல்லாமல் செய்திகள் பரப்பப்பட்டன.

இதனால் தனக்கு கொரோனா தொற்று இருக்குமோ? என்ற அச்சத்தின் காரணமாக அவருக்கு ”கொரோனா” பரிசோதனை நடைப்பெற்றது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவு வந்துள்ளது.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.(File Photo)

கொரோனாத் தொற்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக் கூடும். இதற்கு ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடோ (அல்லது) அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என்ற விதிவிலக்கோ எதுவும் கிடையாது.

ஆனால், ஒருவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அந்த உண்மை என்ன என்று அறியாமல், ஒருவர் மருத்துவமனைக்கு சென்றாலே ”கொரோனாத் தொற்று” என்று செய்தி வெளியிடுவது மற்றும் வதந்தி பரப்புவது எந்த வகையில் நியாயம்?

அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனாத் தொற்று என்று செய்தி வெளியிட்டு விட்டு, அந்த சுவடு மறைவதற்கு உள்ளாகவே, அடுத்த இரண்டு மணி நேரத்தில் சட்ட அமைச்சர் சண்முகத்திற்கு கொரோனா தொற்று இல்லை என்று, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் செய்தி வெளியிட்டால், அதை வாசிக்கும் மக்கள், அந்த ஊடகங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

பணத்திற்காகவும், பரபரப்பிற்காகவும், வதந்திகளைச் செய்திகளாக வெளியிடுவது, ஊடகத்துறையின் நம்பகத்தன்மையை கேள்வி குறியாக்கிவிடும்.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply