உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த ஸ்வப்னா சுரேஷ்!-அதிர வைக்கும் ஆதாரங்கள்.

தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ்.

கேரள மாநில எதிர் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ‘Space Conclave-Edge 2020’ என்ற விண்வெளி தொழில்நுட்ப மாநாடு 31.01.2020 மற்றும் 01.02.2020 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், உலகெங்கிலும் உள்ள விண்வெளி தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளரும், கேரள தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருமான எம்.சிவசங்கர்தான். இந்த நிகழ்சிக்கான மிக முக்கியமான ஒருங்கிணைப்பு பணிகளை ஸ்வப்னா சுரேஷிடம் எம்.சிவசங்கர் ஒப்படைத்தார். இந்த மாநாட்டின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசும் வாய்ப்பும் இவருக்கு வழங்கப்பட்டது.

விண்வெளி தொழில்நுட்ப மாநாட்டிற்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வந்தபோது எதிரில் நிற்கும் ஸ்வப்னா சுரேஷ், அருகில் இருக்கும் முதன்மை செயலாளர் எம். சிவசங்கர் IAS. (File Photo)

இந்த மாநாட்டினை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் வந்து துவக்கி வைத்து தொடக்க உரை ஆற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில், விக்ரம் சரபாய் விண்வெளி மையம் ( Vikram Sarabhai Space Centre -VSSC) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation -ISRO) நிறுவனங்களின் தலைவர் மற்றும் இயக்குநர்களும் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மேலும், கீழ்காணும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள விண்வெளி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள், இம்மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள இரகசியங்கள் அனைத்தும் ஸ்வப்னா சுரேஷ் என்ற இந்த பெண்மணி மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமூக விரோத சக்திகளுக்கு கசிந்திருக்குமோ? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

குற்ற பின்னனி கொண்ட ஸ்வப்னா சுரேஷ் என்ற இந்த பெண்மணிக்கு, கேரள மாநில ஆட்சி நிர்வாகத்தில் இவ்வளவு பெரிய இத்தனை அதிகாரங்களை வழங்கியது யார்? ‘இதுகுறித்து எனக்கு எதுவுமே தெரியாது’ என்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுவது அவர் வயதிற்கும், அவர் வகித்து வரும் பதவிக்கும் உகந்ததாக தெரியவில்லை.

Dr.DURAI BENJAMIN
ullatchithagaval@gmail.com

இதுக்குறித்த முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.http://www.ullatchithagaval.com/2020/07/07/49055/

One Response

  1. MANIMARAN July 16, 2020 10:29 pm

Leave a Reply