கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் மழை, வெள்ளம் அதிகரித்து வருவதால் தேர்தல் நடத்த இயலாது!-இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

Page 1 / 1
Zoom 100%

நாடு முழுவதும், ஒரு லோக்சபா தொகுதியும், 56 சட்டசபை தொகுதிகளும் காலியாக உள்ளன. இவற்றில், தமிழகத்தில் இரண்டு உட்பட, ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும், செப்டம்பர், 7-க்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இடைத்தேர்தல் நடத்துவது, பொது மக்கள் உடல் நலத்திற்கு பாதுகாப்பானதாக அமையாது. சில மாநிலங்களில், அதிகப்படியான மழை, வெள்ளம் போன்றவற்றால், ஓட்டுப் பதிவு இயந்திரங்களை தயார் செய்வது, தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

எனவே, செப்டம்பர், 7 வரை, இடைத்தேர்தல் நடத்த இயலாது. அதன்பின், சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply