சென்னையில் இருந்து போர்ட் பிளேருக்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழைகளால் (The submarine Optical Fibre Cable-OFC) அமைக்கப்பட்டுள்ள கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி வீடியோ கான்பரன்சிங் முறையில் இன்று துவக்கி வைத்தார்.
சென்னை முதல் போர்ட் பிளேர், போர்ட் பிளேயர் முதல் லிட்டில் அந்தமான் மற்றும் போர்ட் பிளேர் முதல் ஸ்வராஜ் தீவு வரையிலான தீவுகளின் முக்கிய பகுதிகளில் இந்த சேவை இன்று தொடங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆழ்கடலில் கணக்கெடுப்பு, கேபிளின் தரத்தை பராமரித்தல் மற்றும் கடலுக்கு அடியில் சுமார் 2,300 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்புக் கப்பல்களுடன் கேபிள் போடுவது மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு முன்னர் அதை முடிப்பது என்பது மிகவும் பாராட்டுக்குரியது.
அதிவேகமான கடல் அலைகள், புயல்கள் மற்றும் பருவமழை போன்ற சவால்களையும், கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட கடினமான காலங்களையும் சமாளித்து, பெரிய சவால்களுக்கு மத்தியில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
ஆன்லைன் வகுப்புகள், வங்கி சேவைகள், ஆன்லைன் வணிகம், டெலிமெடிசன் உள்ளிட்ட சேவைகள் இனி அந்தமான் மக்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடிமகனுக்கும் நவீன வசதிகளை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும், இதனால் சிறந்த வாழ்க்கை வசதி கிடைக்கும் என்றும், தீவுகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த ஆப்டிகல் ஃபைபர் திட்டம். வாழ்வின் எளிமைக்கும், அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
கடலில் வணிகத்தை எளிதாக்குவதற்கும், கடல்சார் தளவாடங்களை எளிதாக்குவதற்கும் அரசாங்கத்தின் கவனம் உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
–Dr.DURAI BENJAMIN
ullatchithagaval@gmail.com
Congratulations sir…..