கழுதைப்பால்-Donkey Milk
கழுதைப்பால் வாதங் கரப்பான் விரணந்
தழுதளையுள் வித்திரதி தானே – யெழுகின்ற
ஒட்டியபுண் சீழ்மேக மோடு சொறிசிறங்கு
கட்டியவை போக்குங் கழறு.
இதுவுமது
கர்த்தவர்த்தின் பாற்குக் கரிய கிரந்தியறுஞ்
சித்தப் பிரமைபித்தந் தீருங்காண் – தத்திவரும்
ஐய மொழியு மதிக மதுரமுமாஞ்
செய்ய மடமயிலே செப்பு.
இவற்றின் குணங்கள் :
கழுதைப்பால் மிகுந்த மதுரமுடையது. இது வாதநோய், கரப்பான், புண், தழுதளை ரோகம், உள்வித்திரிதிக் கட்டி, ஒட்டுக்கிரந்தி, சீழ்ப்பிரமேகம், சொறி, சிரங்கு, அற்புத விரணம், கருங்கிரந்தி, சித்தபிரமை, பித்ததோஷம், கபநோய் இவைகளை போக்கும்.
உபயோகிக்கும் முறை :
இதனைத் தனியாகவும், அவிழ்தங்களுக்கு அனுபானமாகவும், கொடுக்க இச்செய்யுளிற் கண்ட குணங்கள் உண்டாகும். இதனை அதிகமாக அழுகின்ற குழந்தைகட்கு கொடுக்க அழுகை நிற்கும்.
செய்கை : – உற்சாககாரி, கபஹரகாரி.
Dr.துரை பெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,.
மருத்துவ மற்றும் வரலாற்றுச் சுவடிகள் ஆய்வாளர்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
Good information sir……