பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது!-வீடுகளில் அரை (1/2) அடி உயரமுள்ள மண் சிலையை வைத்து வழிபடலாம்!-விநாயகர் சதூர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில், விநாயகர் சதூர்த்தி குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. காவல் நிலையத்தில் வட்டாட்சியர் ரமணி, காவல் ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர், இந்து முன்னணி கட்சி, பாராத் சேவா சங்கம் மற்றும் பா.ஜ.க பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தினர்.

கொரோனா தொற்று காரணமாக, பொதுமக்கள் கூடும் இடங்களில் விநாயகர சிலை வைக்க கூடாது, விருப்பம் உள்ளவர்கள் அவரவர் வீடுகளில் “அரை (1/2) அடி” உயரமுள்ள மண் சிலையை வைத்து வழிபடலாம், அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்காமல், அவரவர் வீட்டில் உள்ள கிணறுகள் (அல்லது) தண்ணீர் தொட்டிகளில் கரைக்கலாம்.

விநாயகர சதூர்த்திக்கு பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்வோர் முகக்கவசம் அணிந்து வந்து, சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும்.

மேலும், அரசாங்கம் அனுமதித்துள்ள சிறிய கோவில்களில் கோவில் திறந்திருக்கும் நேரத்தில் சமூக இடைவெளியுடன் தகுந்த பாதுகாப்புடன் வழிபாடு செய்ய வேண்டும். ஆனால், கோவில்களில் பிரசாதம் வழங்கக் கூடாது.

இவ்வாறு ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-நே.நவீன் குமார்.

One Response

  1. MANIMARAN August 17, 2020 10:13 pm

Leave a Reply