தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு!- 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்புரையின் உண்மை நகல்.

Hon’ble Thiru. Justice T. S. Sivagnanam.

Hon’ble Tmt. Justice V. Bhavani Subbaroyan.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். 815 பக்கங்கள் கொண்ட உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

downloaded-3

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு புகையால், பொது மக்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது, சுற்றுச்சூழல் மாசுபடுகிறது, நிலத்தடி நீரில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என, ஆலைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இத்தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட்டால் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என்று, இத்தொழிற்சாலையை மூடக்கோரி பிப்ரவரி 05, 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.

பின்பு 40 தினங்களாக குமரெட்டியார்புரம் மக்கள் மரத்தடியில் அமர்ந்து போராட்டம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மார்ச் 25, 2018 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் மற்றும் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 20,000-க்கு அதிகமானோர் இத்தொழிற்சாலையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு -1 மார்ச் 31, 2018-க்குப் பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை அந்தக் குழுமம் சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால், ஏப்ரல் 9, 2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது. இந்த முடிவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் முகமது நசிமுத்தின் கூறியுள்ளதாகவும், தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மே 22, 2018 அன்று நூறாவது நாளான போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 17 வயது பெண் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் மீதும், முதலமைச்சர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து மே 23, 2018 அன்று தூத்துக்குடி அண்ணா நகரில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். இதன் மூலம் உயிர் பலி 13 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். ஆலை சீல் வைக்கப்பட்டதற்கான விளம்பரச் சீட்டை ஆலையின் வெளிப்புறக் கதவில் ஒட்டினார்கள்.

இந்நிலையில், 15 டிசம்பர் 2018 ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை ஏதுமில்லை என உத்தரவு பிறப்பித்தது.

NGT-order-dated-15-11-2018-Tamil-Translation-compressed

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் வேதாந்தா நிறுவனம், உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து கடந்த ஆண்டு 2019 பிப்ரவரி 27 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில்தான் ஸ்டெர்லைட் அலையை திறக்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து இவ்வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என்ற சட்டப் போராட்டத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

டாக்டர்.துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN August 19, 2020 12:11 pm

Leave a Reply