பாஜக-வின் வளர்ச்சிக்கு பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்கள் ஆதரவாக செயல்பட்டு வருகிறது, இதன் மூலம் 21 ஆம் நூற்றாண்டின் கிழக்கிந்தியக் கம்பெனியாக முகநூல் மாறிவருகிறது என்று, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் ஏற்கனவே பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை கூறிவந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர், கே.சி.வேணுகோபால், பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய தேர்தல் ஜனநாயக நடவடிக்கைகளில் தலையிடும் வகையில், பேஸ்புக் இந்திய பிரிவின் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர். குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த மூன்று பேரின் வெறுப்பை துாண்டும் வகையிலான பேச்சுகளை, பேஸ்புக் இந்தியா நிர்வாகிகள் நீக்கவில்லை என, அமெரிக்க பத்திரிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேஸ்புக் இந்திய பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து, உங்கள் நிறுவனத்துக்குள்ளேயே உயர்மட்டக் குழு அமைத்து, விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையை ஒன்று அல்லது இரண்டு மாதத்துக்குள் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில், பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, பேஸ்புக் இந்திய பிரிவின் செயல்பாடுகளை நிர்வகிக்க, புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com
இதுத் தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும். https://www.ullatchithagaval.com/2020/08/16/50004/