கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கப்பட்டன. நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்தவாறு விசாரித்து வந்தனர். வழக்கறிஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு காணொளி காட்சி விசாரணையில் ஆஜராகி வந்தனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் உள்பட அனைத்து கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேரடி வழக்கு விசாரணைக்கு, வழக்கு தொடர்ந்தவர்கள் நீதிமன்ற வர அனுமதியில்லை என்றும், வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
PhysicalFunctioninghct07092020
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Good action……