மோடி திட்டத்தில் வீடு கட்டி தருவதாக மோசடி!-பிரதமர் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக பா.ஜ.க.வினர் போலீசில் புகார்.

சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட மலைக் கிராமங்களில் பாரத பிரதமர் மோடி திட்டத்தில், கேரளாவை சேர்ந்த HRDS INDIA -என்ற தொண்டு நிறுவம் மூலம் ரூ.5 லட்ச மதிப்பீட்டில் வீடு கட்டி தருவதாக கூறி, ஏற்காடு ஒன்றிய கவுன்சிலர் கோகிலா சித்தேஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் மாதையன், வெள்ளக்கடை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி ஆகியோர், மக்களிடம் விண்ணப்பங்களை பெற்றதாகவும், இதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.350 முதல் ரூ.1000 வரை பெற்றதாகவும், இதனால் பாரத பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக கூறி, பா.ஜ. மலைவாழ் மக்கள் அணி மாநில பொதுச் செயலாளர் பொன்ராசா தலைமையில், அக்கட்சியினரும், கிராம மக்களும் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆந்தன் விசாரித்து வருகிறார்.

இதுகுறித்து HRDS INDIA நிறுவன தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜேனி கூறுகையில்:
“கேரளாவில் மட்டுமே நாங்கள் செயல்பட்டு வருகிறோம், மற்ற மாநிலங்களில் எங்கள் பணியினை மேற்கொள்ளவில்லை. இவ்வாறு எங்கள் நிறுவன பெயரை குறிப்பிட்டு சிலர் ஏமாற்றி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து கடந்த 27 அன்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இவ்வாறு ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளோம். எங்கள் நிறுவன வலைதளத்தில் விண்ணப்பஙங்களை இலவசமாக பதிவிறக்கலாம். அதை பயன்படுத்தி சிலர் இது போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர் “
இவ்வாறு அவர்
கூறினார்.

இது குறித்து ஒன்றிய கவுன்சிலர் கோகிலா சித்தேஸ்வரன் கூறியதாவது:
” பட்டிப்பாடி கிராமத்தில் எனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தபோது, கூட்டமாக இருந்ததை கண்டு அங்கு சென்று பொதுமக்கள் கூறியதால் அங்கு அமர்ந்தோம். என்ன நடக்கிறது என்ற தகவல்களை மட்டுமே தெரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். “
இவ்வாறு அவர் கூறினார்.

-நே.நவீன் குமார்.

கேரளாவில் மட்டுமே செயல்பட்டு வரும் HRDS INDIA (The Highrange Rural Development Society) நிறுவனம்,கேரளாவில் உள்ள மலைவாழ் மக்களுக்கு கீழ்காணும் வடிவத்தில் வீடு கட்டி தருகிறார்கள்.

எனவே, இந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி யாராவது வசூல் வேட்டையில் ஈடுப்பட்டால், அருகில் உள்ள காவல் நிலையத்திலோ (அல்லது) கீழ்காணும் HRDS INDIA நிறுவனத்தின் அலுவலகத் தொடர்பு எண்ணிற்கோ புகார் தெரிவிக்கலாம்.

Aji Krishnan,
Founder-Secretary
, HRDS INDIA (The Highrange Rural Development Society)

HRDS-INDIA

-கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply