மாட்டுத் தொழுவமாக மாறிய ஏற்காடு பேருந்து நிலையம்!

சேலம் மாவட்டம், ஏற்காடனது தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பிரதான இடம் வகிக்கிறது. அங்குள்ள பேருந்து நிலையமானது ஏற்காடு மையப்பகுதியாகும். ஏற்காட்டில் உள்ள 67 கிராமங்களை சேர்ந்த மக்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் இடமாக உள்ளது.

அதுமட்டுமின்றி வங்கிகள், தபால் நிலையம், தொலைபேசி நிலையம் உள்ளிட்டவையும் அப்பகுதியிலேயே செயல்படுவதால், மழை மற்றும் வெயில் காலங்களில் இங்கு வரும் மக்கள் அமர்வதற்கு பயன்பட்டு வருகிறது.

ஆனால், இந்த நிழற்கூடம் தற்போது, மாடுகள் தங்கும் இடமாக மாறியுள்ளது. மாடுகள் சாணமிட்டும், சிறுநீர் கழித்தும் அங்கு அசுத்தம் செய்கின்றன. இதனால் ஏற்காடு பேருந்து நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் அந்த நிழற்கூடம் உள்ளது. தூய்மை பணியாளர்கள் தினசரி இந்த சாணங்களை அப்புறப்படுத்துகின்றனர். ஆனால், மீண்டும் மீண்டும் மாடுகள் அங்கு முகாமிட்டு வருகின்றன.

எனவே, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த நிழற்கூடத்தில் காலநடைகள் நுழையாதவாறு, தடுப்பு கம்பங்கள் நட்டு, அவ்வப்போது நிழற்கூடத்தை சுத்தம் செய்தால் அங்கு வரும் மக்கள் மகிழச்சியடைவார்கள்.

-நே.நவீன் குமார்.

Leave a Reply