மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகள் கலந்துகொண்ட நிகழ்நிலை (ONLINE) சிலம்பப் போட்டியில் 246 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை மலேசியாவின் சிலம்ப கோர்வைக் கழகம், சிங்கப்பூர் சிலம்ப கோர்வைக் கழகம் மற்றும் உலக இளைஞர் சிலம்ப சம்மேளனம் இணைந்து மலேசிய சிலம்ப மாஸ்டர் கலைமாமணி கு.அன்பழகன் தலைமையிலான குழுவினர் நடத்தினர். போட்டியின் முடிவுகளை 5 நடுவர்களை கொண்ட குழுவினர் ஆராய்ந்து செப்டம்பர் 15 ம் தேதி அறிவித்தனர்.
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் திருச்சி நவல்பட்டு பயிற்சிப்பள்ளி காவலர் அரவிந்த் முதல் பரிசு தங்கபதக்கம் பெற்றுள்ளார்.
பெண்கள் பிரிவில் காவலர் அரவிந்த் பயிற்சியளித்த மாணவிகள் சுகித்தா மோகன் முதல் பரிசு தங்கமும், நவசக்தி இரண்டாம் பரிசு வெள்ளியும் பெற்றுள்ளனர்.
காவலர் அரவிந்த் எந்தவித கட்டணமும் இன்றி அனைவருக்கும் சிலம்பம் கற்று தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கம் வென்ற சிலம்பாட்ட வீரர்கள் திருச்சி சரக DIG முனைவர் Z.ஆனி விஜயாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
உடன் திருச்சியின் மூத்த சிலம்ப ஆசான் கலைசுடர்மணி M.ஜெயக்குமார், சுகித்தாவின் தந்தை இரா.மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
-துரைதிரவியம்.
Congratulations champions……