அரசுக்கு சொந்தமான நிலத்தை வீட்டு மனைகளாக விற்ற விவகாரம்!-உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை.

பரட்டையன் மகன் சந்தனம்.(FILE PHOTO)

திருச்சி மாவட்டம், திருச்சி (கிழக்கு) வட்டம், கொட்டப்பட்டு கிராமம், சர்வே எண்: 316/7– ல் உள்ள அரசுக்கு சொந்தமான 0.26.5 Hectares (சுமார் 65 சென்ட்) நிலத்தை, திருச்சி மாவட்டம், திருச்சி (கிழக்கு) வட்டம், கொட்டப்பட்டு கிராமம், குளவாய்பட்டியை சேர்ந்த பரட்டையன் மகன் சந்தனம் என்பவர், சட்ட விரோதமான முறையில் ‘அ’ பதிவேடு -‘A’ Register உள்ளிட்ட வருவாய்துறை ஆவணங்களை தன் பெயருக்கு மாற்றி, அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை, “பிளாட்” போட்டு வீட்டு மனைகளாக விற்றுள்ளார். இதன் மூலம் அரசாங்கத்தையும், அப்பாவி பொதுமக்களையும் ஏமாற்றி லட்சக்கணக்காண ரூபாய் ஆதாயம் அடைந்துள்ளார்.

APP_8400001_TXN_181013070_TMPLT_8400004

இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பல முறை வருவாய்துறையினருக்கு புகார் அளித்தும், வருவாய்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போகவே, திருச்சியை சேர்ந்த K.அருணாச்சலம் என்பவர், சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை W.P(MD)No.20537 of 2018 தாக்கல் செய்ததின் பேரில், உயர்நீதி மன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் ஆர்.தரணி ஆகியோர் 12.11.2019 அன்று ஒரு உத்தரவை வழங்கினார்கள். புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள சர்வே எண்: 316/7– ல் உள்ள இடம் குறித்து, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் நேர்மையான முறையில் உரிய விசாரணை மேற்கொண்டு, ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், புகாரில் குறிப்பிட்டுள்ளப்படி அந்த இடம் சம்மந்தமாக ஏதாவது மோசடி நடைப்பெற்று இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Hon’ble Thiru. Justice T. S. Sivagnanam.

Hon’ble Tmt. Justice R.Tharani.

downloaded-4

12.11.2019 அன்று சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் ன்.விஸ்வநாதன் முன்னிலையில், இன்று (25.09.2020) மாலை விசாரணை நடைப்பெற்றது. இந்த விசாரணைபோது மனுதாரர் K.அருணாச்சலம், எதிர்தரப்பு பரட்டையன் மகன் சந்தனம் மற்றும் அவர் சார்பில் வாதாட வழக்கறிஞர் ஒருவரும் ஆஜரானார்கள்.

சர்வே எண்: 316/7– இடம் சம்மந்தமாக  வருவாய் கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன் கேட்ட கேள்விகளுக்கு, உரிய ஆவணங்களை சமர்பிக்க முடியாமல்  சந்தனம் தரப்பு வழக்கறிஞர் தடுமாறினார்.

அரசு நிலம் உங்கள் பெயருக்கு எப்படி வந்தது? சர்வே எண்: 316/7– க்கான பட்டா எங்கே? என்று கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன் கேட்க, அதற்கு சந்தனம் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் வழங்கினால் பட்டாவை ஒப்படைப்பதாக கூறினார். அதை எழுத்து மூலமாக தெரிவிக்குமாறு கூறிய வருவாய் கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன், அடுத்த விசாரணை தேதியை 06 நவம்பர் 2020-க்கு ஒத்தி வைத்து உத்தவிட்டுள்ளார்.

வீடு இல்லாத நபர்கள் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வருவதையும், அது நஞ்சை (அல்லது) புஞ்சை நிலமாக இருக்கும் பட்சத்தில் பரம்பரை, பரம்பரையாக விவசாயம் செய்து அனுபவித்து வருவதையும் நாம் நடைமுறையில் பார்த்து இருக்கிறோம். அதுபோன்ற நபர்களுக்கு, உரிய ஆவணங்களின் அடிப்படையில், வருவாய்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டா வழங்கப்பட்டு இருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல் திடீரென அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, தனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பாகப்பிரிவினை மூலம் அந்த இடம் தனக்கு வந்ததாக போலி ஆவணம் தயாரித்து, சட்ட விரோதமான முறையில் வருவாய்துறை ஆவணங்களை தன் பெயருக்கு மாற்றி, “பிளாட்” போட்டு வீட்டு மனைகளாக மற்றவர்களுக்கு விற்றுள்ள பரட்டையன் மகன் சந்தனத்தின் நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது ஒரு அப்பாவி மனிதனின் செயல்பாடாக இதை அலட்சியப்படுத்த முடியவில்லை. இவருக்கு பின்னால் திரை மறைவில் ஒரு “மாபியா கூட்டம்” இருப்பதாகதான் உணர முடிகிறது. எனவே, இவரின் குற்றப் பின்னனிக் குறித்து விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். அப்போது தான் உண்மை வெட்ட வெளிச்சமாகும்.

அரசு இடத்தை மீட்பது எவ்வளவு அவசியமோ; அதைபோல் மனுதாரரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அதைவிட அவசியம்.

-கே.பி.சுகுமார்.

இது சம்மந்தமான முந்தைய செய்திகளுக்கு கீழ் காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2019/05/06/41950/

https://www.ullatchithagaval.com/2019/05/07/41981/

Leave a Reply