வேளாண் மசோதாக்களுக்கு எதிராக, கேரள ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரசார் ஆர்பாட்டம்!- ஆளுநர் ஆரிப் முகமது கானை நேரில் சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தனர்.

Live

Posted by Indian National Congress – Kerala on Sunday, 27 September 2020

மத்திய அரசு அமைதியாகவும், ஜனநாயக விரோதமாகவும் நிறைவேற்றப்பட்ட “வேளாண் மசோதா முற்றிலும் தேச துரோகம், பெரிய கார்ப்பரேட்டுகளின் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை இன்னும் அதிக துன்பத்திற்கு செல்லும். இதெல்லாம் தெரிந்தும், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance-NDA) அரசு, இந்த மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

எனவே, இந்த வேளாண் மசோதாக்களை தடுத்து நிறுத்தி , அவற்றை பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் தலைமையில், கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. அதன் பிறகு பேரணியாகச் சென்று, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை நேரில் சந்தித்து, விவசாயிகள் சார்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply