10-ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த காம வெறிப்பிடித்த கயவர்கள்..!-முக்கிய குற்றவாளியை கைது செய்யாமல் தப்பவிட்ட போலிசார்..!-வேதாரண்யத்தில் நடந்த விபரீதம்.

வேதா மெஸ் உரிமையாளர் சண்முக சுந்தரம்.

வேதாரண்யத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் யோகேஸ்வரி என்ற 16 வயது சிறுமி வறுமையின் காரணமாக தனது அம்மாவிற்கு உதவியாக வேதாரண்யத்தில் உள்ள “வேதா மெஸ்”-என்ற உணவகத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இடையில் தனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால், ர் மட்டும் “வேதா மெஸ்” உணவகத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். தனியாக இருந்த சிறுமி யோகேஸ்வரியை, வேதா மெஸ் உரிமையாளர் சண்முக சுந்தரம் என்ற காமுகன், பின் பக்கமாக சென்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த யோகேஸ்வரி “வேதா மெஸ்” உணவகத்திற்கு வேலைக்கு செல்வதை நிறுத்திக் கொண்டார்.

இச்சம்பவத்தை தன் குடும்பத்தாரிடம் கூற பயந்து கொண்டு, அவர் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த துர்காதேவி என்ற பெண்ணிடம் சொல்லி அழுதுள்ளார்.

புரோக்கராக செயல்பட்ட அரவிந்த் என்பவரின் மனைவி துர்காதேவி.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட துர்காதேவி, தன் கணவனின் நண்பன் எம்.ஆர்.கோழிப் பண்ணை உரிமையாளர் விஜி என்கின்ற விஜயன் என்பவரிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, சிறுமி யோகேஸ்வரிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து எம்.ஆர்.கோழிப் பண்ணை உரிமையாளர் விஜி என்கின்ற விஜயனின் காம வெறிக்கு யோகேஸ்வரியை விருந்தாக்கியுள்ளார்.

அன்று முதல் “அடுப்புக்கு பயந்து நெருப்புக்குள் விழுந்த கதையாக” சிறுமி யோகேஸ்வரியின் நிலமை மாறிப்போனது.

எம்.ஆர்.கோழிப் பண்ணை உரிமையாளர் விஜி (என்கின்ற) விஜயன்.

சிறுமி யோகேஸ்வரிடம் உடலுறவு கொண்டதை செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அழைக்குபோதெல்லாம் ஆசைக்கு இணங்காவிட்டால், அதை உன் அண்ணனுக்கு அனுப்பி விடுவேன், வாட்ஸ் அப்பிலும் வெளியிட்டு விடுவேன், இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும், எம்.ஆர்.கோழிப் பண்ணை உரிமையாளர் விஜி என்கின்ற விஜயன்அந்த சிறுமியை மிரட்டி அனேக முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

துர்காதேவியின் கணவர் அரவிந்த்.

மனைவி துர்காதேவியுடன் அரவிந்த்.

இதற்கிடையில் துர்காதேவியின் கணவன் அரவிந்த் என்பவனும் சிறுமி யோகேஸ்வரியை மிரட்டி அவரை வன்புணர்வு செய்துள்ளான்.

இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளான சிறுமி யோகேஸ்வரி, நேற்று (01.10.2020) காலை 8 மணியளவில் வேதாரண்யம் மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மலர்கொடி என்பவரிடம் தனக்கு நடந்த துயரங்களை குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

சிறுமி யோகேஸ்வரி அளித்த புகாரை பெற்றுக்கொண்ட வேதாரண்யம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர்கொடி, இது சம்மந்தமாக எம்.ஆர்.கோழிப் பண்ணை உரிமையாளர் விஜி என்கின்ற விஜயன், துர்காதேவியின் கணவன் அரவிந்த், வேதா மெஸ் உரிமையாளர் சண்முக சுந்தரம், புரோக்கராக செயல்பட்ட துர்காதேவி ஆகியோர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு (குற்ற எண்: 07/2020) பதிவு செய்துள்ளார்.

முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

இதுதொடர்பாக எம்.ஆர்.கோழிப் பண்ணை உரிமையாளர் விஜி என்கின்ற விஜயன், துர்காதேவியின் கணவன் அரவிந்த், புரோக்கராக செயல்பட்ட துர்காதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வேதா மெஸ் உரிமையாளர் சண்முக சுந்தரம்.

ஆனால், சிறுமி யோகேஸ்வரியின் இந்த நிலமைக்கு முதல் முக்கிய காரணமாக இருந்த “வேதா மெஸ்” உரிமையாளர் சண்முக சுந்தரம் மட்டும் இன்னும் கைது செய்யப்படவில்லை.

காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட “வேதா மெஸ்” உரிமையாளர் சண்முக சுந்தரம், தனது பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக, தனக்கு உடல்நல பாதிப்பு இருப்பதாக நாடகமாடி, காவல்துறையினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது முன் ஜாமீன் பெறுவதற்காக முயற்சித்து வருவதாகவும், அப்பகுதி மக்கள் ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.

இதனால் வெறுப்படைந்த அப்பகுதி மக்கள், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான “வேதா மெஸ்” உரிமையாளர் சண்முக சுந்தரத்தை காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, வேதாரண்யம் வட்டாட்சியர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் இன்று மனு கொடுத்துள்ளனர்.

இக்குற்ற வழக்கில் அரசியல் தலையீடு இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி யோகேஸ்வரிக்கு உரிய நீதியும், அவரது குடும்பத்திற்கு போதிய பாதுகாப்பும், உரிய இழப்பீடும் வழங்குவதற்கு, தமிழக முதலமைச்சர் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசு மீதும், தமிழக காவல்துறை மீதும் மக்களுக்கு நம்பிக்கையும், மதிப்பும் உண்டாகும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

படங்கள்: UTL MEDIA TEAM.

One Response

  1. MANIMARAN October 2, 2020 5:31 pm

Leave a Reply