Shri_Rahul_Gandhi-_05-10-2020-1
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக, விவசாயிகளை சந்திப்பதற்காக தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, பஞ்சாப், பாட்டியாலா சர்க்யூட் ஹவுஸில் செய்தியாளர்களை சந்தித்து இன்று உரையாற்றினார்.
ஒட்டுமொத்த நாடும், மக்களும் அடித்து கீழே தள்ளிவிடப்படுகின்றனர். அதில் நான் கீழே தள்ளிவிடப்பட்டது பெரியவிஷயமல்ல. நாட்டை காப்பது நமது கடமை. விவசாயிகளுக்கு நாம் துணை நிற்க வேண்டும். நாம் அரசுக்கு எதிராக போராடினால், கீழே தள்ளிவிடப்படுவோம். தடி கொண்டு தாக்கப்படுவோம். அதுதான் இந்த அரசு.
உண்மையாக கீழே தள்ளிவிடப்பட்டதை உணர்ந்தவர் யாரென்றால், இளம்பெண்ணின் குடும்பத்தினர் தான். பெண் குழந்தை வைத்துள்ளவர்கள் இதனை உணர்ந்திருப்பார்கள். உங்களுக்கு பெண் குழந்தைகள் இல்லையென்றாலும், ஹத்ராஸ் விவகாரத்தில் கொலைக்கான நோக்கத்தை புரிந்து கொள்ளலாம். அவர்கள் இந்த போராட்டத்தில் தனித்து விடப்படவில்லை என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தவே விரும்பினேன்.
தினமும் ஏதோ விதங்களில் ஆண்களால் வன்கொடுமைகளை அனுபவிக்கும் லட்சகணக்கான பெண்கள் பக்கம் நான் உறுதுணையாக நிற்பேன் என்பதை தெரிவிக்க விரும்பினேன்.
ஒரு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தால் அக்குழந்தைக்காகவும், அந்த குடும்பத்திற்காகவும், நாடு முழுவதும் மக்கள் பிராத்தனை செய்கிறார்கள், ஆனால், நாட்டின் பிரதமர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
இவ்வாறு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
–எஸ்.சதிஸ் சர்மா.