அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களின் காலியிடங்களை நிரப்புங்கள்!-புதிய தனியார் தமிழ் பள்ளிகளை திறக்க அங்கீகாரம் வழங்குங்கள்…!-கர்நாடகா முதலமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் கடிதம்.

தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா.

pr081020_740

கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் தங்கள் தாய்மொழியான தமிழில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக , கடந்த ஆண்டுகளில் கர்நாடக மாநிலத்தில் பல தமிழ்ப் பள்ளிகளை கர்நாடக அரசு துவக்கியது. மேலும், தனியார் பள்ளிகளுக்கு கர்நாடக அரசு அங்கீகாரமும், மானியமும் வழங்கி உள்ளது.

இதன் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு, கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை மனு வந்துள்ளது. அம்மனுவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பதவி இடங்கள் காலியாக உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. அது தவிர புதிதாக தனியார் பள்ளிகள் துவக்க கர்நாடக மாநில அரசு இப்பொழுது அனுமதி தருவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு வந்த கோரிக்கை கடிதத்தின் பிரதியை தங்களுடைய பரிசீலனைக்காக இணைத்து உள்ளேன்.

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்காக தமிழர்கள் கணிசமான பங்களிப்பு செய்து வருகிறார்கள். குறிப்பாக கோலார் தங்கச் சுரங்கங்கள், ஹூட்டி தங்கச் சுரங்கங்கள், சாண்டூர் மங்கனீசு சுரங்கங்கள், சிக்மகளூர் , மங்களூர் ஆகிய இடங்களில் உள்ள காப்பி எஸ்டேட்டுகள் ஆகியவற்றின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு கணிசமானது.

கர்நாடக மாநிலத்தின் கட்டுமானத் துறை மற்றும் விவசாயத் துறையில் தமிழர்களின் பங்கு பணி மிகவும் முக்கியத்துவம் உடையதாகும்.

எனவே, தமிழ் பேசும் மக்களே நலன்களைக் காப்பாற்றுவதற்காக, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி நான் வேண்டுகிறேன்.

இதற்காக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை நிறைவேற்ற தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

i) கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணிகளை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

(ii) சமீபத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.

(iii) தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட புதிய தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதோடு, புதிய தனியார் தமிழ் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கும் படியும் கேட்டுக்கொள்கிறேன்.

(IV) பிறமொழி பள்ளிகளாக மாற்றப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை மீண்டும் பழைய நிலைக்கு திருத்தி அமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply