பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தமிழ், கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தை (Pandit Deendayal Upadhyaya Institute of Archaeology) 9 மார்ச் 2019 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தபோது (File Photos)

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் (Pandit Deendayal Upadhyaya Institute of Archaeology) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மேற்கில், தில்லியை ஒட்டி அமைந்த கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள பெருநகர நொய்டாவில் அமைந்துள்ளது. இத்தொல்லியல் கல்வி நிலையத்தை 9 மார்ச் 2019 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.

தொல்லியல் படிப்பில் முதுகலை பட்டயப் படிப்பு கற்றுத் தரும் இத்தொல்லியல் வளாகம் ரூபாய் 289 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் 1000 பேர் அமரக்கூடிய கூட்ட அரங்கம், திறந்த வெளி அரங்கம், தொல்லியல் அருங்காட்சியகத்துடன் கூடியது. இந்நிறுவனம் தொல்லியல் மற்றும் அகழ்வாய்வு படிப்புகளில் பட்டமேற்படிப்பு பட்டயக் கல்வி ((Post Graduate Diplom) வழங்குகிறது.

இந்த தொல்லியல் நிறுவனத்தில் இரண்டு ஆண்டு முதுநிலை தொல்லியல் டிப்ளமா படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விளம்பரம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படிப்புக்கான அறிவிப்பில் குறைந்தபட்ச கல்வி தகுதியக முதுகலை பட்டப்படிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது.

தொல்லியல் சார்ந்த இந்திய மொழிகளான சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபிக் அல்லது பெர்சியன் மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். ஆனால், தமிழ்மொழி இதில் இடம்பெறவில்லை. இதனையடுத்து அப்பட்டியலில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என பல தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி கடிதம் எழுதினார்.

இதையடுத்து நேற்று (08.10.2020) வெளியான புதிய அறிவிப்பில் தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், தொல்லியல் சார்ந்த இந்திய மொழிகளான தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் தெலுங்கு, மலையாளம், ஒடியா, பாலி, பிராகிருதம் மற்றும் அரபிக் அல்லது பெர்சியன் மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்ளும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி.

இவ்விசியத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி நன்றி தெரிவித்து இன்று (09.10.2020) கடிதம் அனுப்பியுள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN October 13, 2020 7:41 pm

Leave a Reply