கொரோனா பொது முடக்கத்தின்போது 6 மாதம் தவணை செலுத்தாத ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என்பதை, உடனே அமல்படுத்த வேண்டும்! -மத்திய அரசுக்கு,உச்சநீதிமன்றம் உத்தரவு.

கொரோனா (COVID-19) வைரஸ் பரவல் தடுப்பு பொது முடக்கத்தின்போது 6 மாதம் தவணை தொகை செலுத்தாத ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என்பதை, உடனே அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் வாங்கிய தனிநபர் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்ட் மீதான கடன் உள்ளிட்ட அனைத்து கடன் தவணைகளையும் செலுத்துவதற்கு, மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடன் தவணைகளுக்கு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வட்டிக்கு, வட்டி வசூலிக்க தொடங்கியது.

இந்நிலையில், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடவடிக்கையை வங்கிகள் கைவிட வேண்டும்; இதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க வேண்டும் என, இந்த விவகாரம் தொடர்பாக தனிநபர்களும் மற்றும் பல தனியார் நிறுவனங்களும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இது தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்ற அமர்வு அனுப்பிய நோட்டிஸ் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைக்கு வட்டிக்கு, வட்டி வசூலிக்கப்படாது என அதில் உறுதியளித்திருந்தது.

Page 1 / 20
Zoom 100%

இந்நிலையில், இன்று (அக்டோபர்14) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், வட்டிக்கு வட்டி இல்லை என்பதை வங்கிகள் அமல்படுத்த தொடங்கி விட்டதாகவும், முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் அளிக்கும்படி மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Page 1 / 8
Zoom 100%

ஒரு மாதம் அவகாசம் கேட்பது நியாயமில்லை என தெரிவித்த நீதிபதிகள், கொரோனா பொது முடக்கத்தின் போது 6 மாதம் தவணை செலுத்தாத ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு, வட்டி வசூலிக்கப்படாது என்பதை, உடனே அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN October 15, 2020 10:04 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply