கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை கைவிட்டுவிட வேண்டாம் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள்.

FILE PHOTO

LIVE. राष्ट्र के नाम संदेश…

LIVE. राष्ट्र के नाम संदेश…

Posted by Narendra Modi on Tuesday, 20 October 2020

In a televised address to the nation, the Prime Minister Shri Narendra Modi made a fervent appeal to all the citizens to not let their guard down and become complacent, in the country’s ongoing fight against the Covid Pandemic.

Shri Narendra Modi said despite the lockdown having been lifted it does not mean that the Corona Virus is wiped out.

He appreciated the improvement in the situation all over the country and that economic activity is returning to normal and that people started moving out of their houses to fulfill the responsibilities.

Shri Modi observed that markets have also started returning to normalcy with the advent of the festivities.

He said India is in a better situation due to the efforts of every Indian in the last 7-8 months and one should not let it deteriorate.

The Prime Minister noted that the recovery rate in the country has improved and the fatality rate is low. Shri Modi stated that for every 10 Lakh Citizens about 5500 were infected with corona, while in countries like the US and Brazil the figure is nearly 25000.

He said that the death rate in India is 83 for every 10 Lakh Citizens , whereas in developed countries like the US, Brazil, Spain, Britain and many other countries  it is about 600.

The Prime Minister appreciated that in comparison to many developed nations, India is getting successful in protecting many lives of its citizens in the country.

The Prime Minister mentioned the improvement of the Covid Infrastructure in the country. He said more than 90 Lakh beds are available for corona patients along with 12000 Quarantine centres across the country.

He said over 2000  Corona Testing 2000 labs are functional all over the country, while the number of tests will soon cross 10 Crore. 

He said India is succeeding in saving the lives of more and more of its citizens in comparison to the resource-rich countries and that the increasing number of tests has been a great strength in the country’s fight against the Covid pandemic.

The Prime Minister lauded the efforts of the doctors, nurses and health workers who are selflessly serving such a large population, following the mantra of “Seva Parmo Dharma.”

He warned people not to be callous, amidst all these efforts and not to assume that the corona virus is gone, or that there is no danger from the corona now.

Cautioning the people who have stopped taking precautions of late, he said “If you are negligent and going out without a mask, you are exposing yourself, your family, your children, the elderly to the same amount of risk.”

The Prime Minister referred to the ongoing situation in the US and Europe where the number of cases of Corona initially decreased but then suddenly started increasing.

He urged the people not to be negligent until a vaccine against the pandemic is found and let the fight against the Covid-19 weaken.

The Prime Minister said efforts are on a war footing to save humanity and many countries including the country’s scientists are working on the production of a vaccine.

He said the work is going on various vaccines against corona and that some of these are in an advanced stage.

The Prime Minister said the Government is also preparing a detailed road map to reach the vaccine to every single citizen as soon as it is readily available.

He again urged the people to not lax until the vaccine is done.

The Prime Minister said we are going through a difficult time and a little carelessness can lead to a great crisis and tarnish our happiness.

He urged citizens to be vigilant while fulfilling their responsibilities.

He appealed to the citizens to maintain the 6 feet distance (Do Gaj ki Doori), to wash their hands with soap periodically and to wear face masks.

தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான செயல்பாடுகளில் மக்கள் தங்கள் தீவிர முனைப்பை கைவிட்டுவிடக் கூடாது என்றும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

முடக்கநிலை நீக்கப்பட்டு விட்டாலும், கொரோனா வைரஸ் அழிக்கப்பட்டு விட்டதாக அர்த்தம் கிடையாது என்று நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

நாடு முழுக்க கொரோனா சிகிச்சை நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து பாராட்டு தெரிவித்த அவர், பொருளாதார செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், தங்கள் கடமைகளை ஆற்ற மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்லத் தொடங்கிவிட்டார்கள் என்றும் கூறினார்.

திருவிழாக்கள் வருவதால், சந்தைகளும் கூட இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன என்று  அவர் குறிப்பிட்டார்.

கடந்த 7 – 8 மாதங்களில் ஒவ்வொரு இந்தியரும் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, இந்தியா இப்போது நல்ல நிலையில் உள்ளது என்று கூறிய அவர், இந்த சூழ்நிலை கெட்டுப் போக அனுமதித்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெறும் விகிதம் அதிகரித்துள்ளது, மரணம் அடைவோரின் விகிதம் குறைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். 10 லட்சம் பேரில் 5500 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அவர் கூறினார். அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் 10 லட்சம் குடிமக்களுக்கு 83 என்ற எண்ணிக்கையில் மரண விகிதம் உள்ளதாகவும், அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் இந்த எண்ணிக்கை சுமார் 600 என உள்ளதாகவும் தெரிவித்தார்.

வளர்ச்சி அடைந்த பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாக வெளியான ஒப்பீடுகளை அவர் பாராட்டினார்.

நாட்டில் கொவிட் பாதிப்புக்கு எதிரான சிகிச்சைக்குத் தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டிருப்பதை பிரதமர் பட்டியலிட்டார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 90 லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன என்றும், 12 ஆயிரம் தனிமைப்படுத்தல் சிகிச்சை மையங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுக்க கொரோனா பரிசோதனை செய்த 2000-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் 10 கோடி பரிசோதனைகளைக் கடந்துவிடுவோம் என்றும் பிரதமர் கூறினார்.

வசதி படைத்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, அதிக எண்ணிக்கையிலான குடிமக்களின் உயிரை இந்தியா வெற்றிகரமாகக் காப்பாற்றி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரான செயல்பாட்டுக்கு பலம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

“சேவா பர்மோ தர்மா” என்ற மந்திரத்தைப் பின்பற்றி தன்னலமற்ற சேவைகள் செய்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் அலுவலர்களின் பணிகளை பிரதமர் பாராட்டினார்.

இவ்வளவு முயற்சிகள் எடுத்துள்ள நிலையில், மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று அவர் எச்சரித்தார். கொரோனா வைரஸ் போய்விட்டது என்றோ, இனிமேலும் கொரோனாவால் அபாயம் நேராது என்றோ நினைத்துவிட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

சமீப காலமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், “நீங்கள் அலட்சியமாக இருந்து, முகக்கவச உறை  இல்லாமல் வெளியில் சென்றால், நீங்களே உங்களை, உங்கள் குடும்பத்தை, குழந்தைகளை, முதியவர்களை நோய்த் தாக்குதலுக்கு ஆட்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதாக அர்த்தம்” என்றார் அவர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் குறையத் தொடங்கி, பிறகு திடீரென அதிகரிக்கத் தொடங்கி இருப்பதை சுட்டிக்காட்டி பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறையும் வரையில் மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்குப் போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப் படுகின்றன என்றும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நமது விஞ்ஞானிகளும், பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன, சில ஆய்வுகள் முன்னேறிய கட்டத்தில் உள்ளன என்று பிரதமர் கூறினார்.

தடுப்பு மருந்து கிடைத்தவுடன், குடிமக்கள் ஒவ்வொருவருக்ரும் அதை அளிப்பதற்கான, விரிவான திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி போடும் வரையில் யாரும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

நாம் சிரமமான காலக்கட்டத்தில் இருக்கிறோம், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் பெரிய நெருக்கடி ஏற்பட்டு, நமது மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.

தங்கள் கடமைகளைச் செய்யும்போது குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஆறு அடி இடைவெளி பராமரித்தல், அவ்வப்போது சோப்பு போட்டு கைகளைக் கழுவுதல், முகக்கவச உறை அணிதல் ஆகிய செயல்பாடுகளை தொடர்ந்து செய்யுமாறு பிரதமர் வலியுறுத்தினார்.

-எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply