மஹராஷ்ரா மாநிலத்தில் பெய்த கனமழையால் கரும்பு, சோயா பீன்ஸ் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது.
உஸ்மானாபாத், லாடூர், நந்தெட், சோலாப்பூர் மாவட்டங்கள் மற்றும் புனே மாவட்டத்தின் இண்டபூர் பகுதி மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்படைந்துள்ளன.
வீட்டு விலங்குகளும், வன விலங்குகளும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளன. சில இடங்களில் ஆற்றின் கரையோரம் இருந்த விவசாய கிணறுகள், மோட்டார் பம்பு செட்டுகள் மற்றும் மின் இயந்திரங்கள், சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டிருந்த பைப் லைன்கள் இவை அனைத்தும் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
உஸ்மானாபாத் மாவட்டம், துல்ஜாபூர் பகுதியில் உள்ள கக்ரம்பாவடி, லோஹாரில் சாஸ்தூர், ராஜேகான், உமார்கியாவில் கவதா, ஆசா தாலுகா, படோடா, கராஜ்கேடாவில் உள்ள உஜானி ஆகிய பகுதிகளை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் சேதம் விபரங்களை கேட்டறிந்தார்.
மேலும், துல்ஜாப்பூர் – பரந்தா பகுதியில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் விவசாயிகளுடன் சரத்பவார் நேரில் உரையாடினார்.
–எஸ்.சதிஸ் சர்மா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com