கேரளாவில் மாநில அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போது காவலில் உள்ளது!- எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா பகிரங்கக் குற்றச்சாட்டு.

கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா.

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் எம் சிவசங்கர் கைது; சி. பி. எம் மாநில செயலாளர் மகன் பினேஷ் கோடியேரி போதை மருந்து வழக்கில் கைது; மாநில அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போது காவலில் உள்ளது. கேரளா கொள்ளை கூட்டத்தால் ஆளப்படுகிறது, இது கேரளாவுக்கு ஒரு பெருத்த அவமானம்.

மாஃபியாவில் கட்சியும், ஆட்சியும் ஒன்றாக வேலை செய்கின்றன. முதல்வரை திருத்த வேண்டிய கட்சியின் நிலைமை இதுதான். எதிர்க்கட்சிகள் சொல்லும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளும் உண்மை என்பது ஒவ்வொரு நாளும் நிரூபிக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி, பினராயி அரசு நிழலில் உள்ளது. கேரள மாநிலத்தில் தேச துரோக நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு கடைசி உதாரணம் கட்சி மாநில செயலாளர் மகனை போதை மருந்து வழக்கில் கைது செய்தது.

கேரளாவில் முதல்வர் அலுவலகத்திலும், கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் வீட்டிலும் போதைப்பொருள் வியாபாரம் நடக்கும் மிகத் தீவிர நிலை. இது கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் மகன் மீது பதியப்படும் முதல் குற்றச்சாட்டு அல்ல. வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டுவதில் இப்படி ஒரு ஊழல் நடந்துள்ளதாக தகவல்.

கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பில் முதல்வரை விட, கட்சிச் செயலாளர் முக்கியம். அதனால் தான் கட்சி செயலாளர் மகன் செய்த குற்றத்திற்கு கட்சியும், ஆட்சியும் பொறுப்பல்ல என்ற வாதத்தை முன்வைத்துள்ளனர். இதை சோறு திங்கிறவங்க யாரும் நம்ப போறதில்லை.

இனியும் ஆட்சியில் இருக்க இந்த மானங்கெட்ட அரசுக்கு உரிமையில்லை. கேரளாவில் மூன்றரை கோடி மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கோடியேரி பாலகிருஷ்ணன் ஆகியோர் இனி கனவில் கூட நினைத்துப் பார்க்கக்கூடாது.

இவ்வாறு கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN October 31, 2020 8:47 am

Leave a Reply to MANIMARAN Cancel reply