ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்கவும், பட்டாசு வெடிக்கவும் தடை!- தீபாவளிக்கு மட்டுமல்ல; திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது!- முதலமைச்சர் அசோக் கெலாட் அதிரடி உத்தரவு.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்.

पटाखों से निकलने वाले विषैले धुएं से कोविड-19 संक्रमित रोगियों एवं आमजन के स्वास्थ्य की रक्षा के लिए प्रदेश में पटाखों की बिक्री एवं आतिशबाजी पर रोक लगाने तथा बिना फिटनेस के धुआं उगलने वाले वाहनों पर सख्त कार्रवाई के निर्देश दिए हैं। कोरोना महामारी के इस चुनौतीपूर्ण समय में प्रदेशवासियों की जीवन की रक्षा सरकार के लिए सर्वोपरि है।निवास पर प्रदेश में कोविड-19 संक्रमण की स्थिति, ‘नो मास्क-नो एंट्री’ तथा ‘शुद्ध के लिए युद्ध’ अभियान की समीक्षा की। बैठक में अनलॉक-6 की गाइडलाइन पर भी चर्चा की और दिशा-निर्देश भी दिए। आतिशबाजी से निकलने वाले धुएं के कारण कोविड मरीजों के साथ ही हृदय एवं श्वास रोगियों को भी तकलीफ का सामना करना पड़ता है। ऐसे में, दीवाली पर लोग आतिशबाजी से बचें। पटाखों के विक्रय के अस्थायी लाईसेन्स पर रोक लगाने के निर्देश दिए। शादी एवं अन्य समारोह में भी आतिशबाजी को रोका जाए। जर्मनी, यूके, फ्रांस, इटली, स्पेन जैसे विकसित देशों में कोरोना की दूसरी लहर शुरू हो गई है। कई देशों को तो पुनः लॉकडाउन लगाने पर मजबूर होना पड़ा है। हमारे यहां भी ऐसी स्थिति उत्पन्न न हो जाए, इसे देखते हुए हमें भी सावधानी बरतनी होगी।वाहन चालकों से अपील है कि वे लालबत्ती होने पर वाहनों के इंजन को बंद कर दें। साथ ही, मौहल्लों में कचरे को न जलाएं। ऐसे छोटे, किन्तु महत्वपूर्ण उपाय अपनाकर हम सभी पर्यावरण प्रदूषण रोकने और प्रदेशवासियों के स्वास्थ्य की रक्षा के लिए राज्य सरकार द्वारा किए जा रहे प्रयासों में सहयोग कर सकते हैं। निर्देश दिए कि प्रदूषण मानकों का उल्लंघन करने वाले वाहन चालकों पर कड़ी कार्रवाई की जाए। फिटनेस होने के बावजूद यदि वाहन निर्धारित मात्रा से अधिक धुआं छोड़ते पाया जाता है तो सम्बन्धित फिटनेस सेन्टर पर भी कार्रवाई हो। प्रदेश में 2000 चिकित्सकों की भर्ती प्रक्रिया को जल्द पूरा किया जाए। परीक्षा परिणाम में चयनित चिकित्सकों को समस्त प्रक्रिया 10 दिन के भीतर पूरी कर जल्द नियुक्ति दी जाए। इससे कोरोना सहित अन्य रोगों के उपचार में मदद मिलेगी।अनलॉक-6 की गाइडलाइन पर चर्चा के दौरान प्रमुख शासन सचिव गृह श्री अभय कुमार ने बताया कि प्रदेश में स्कूल-कॉलेज सहित शिक्षण संस्थान एवं कोचिंग सेन्टर्स 16 नवम्बर तक नियमित शैक्षणिक गतिविधियों के लिए बन्द रहेंगे। इसके पश्चात पुनः समीक्षा कर उनके सम्बन्ध में निर्णय लिया जाएगा। स्वीमिंग पूल, सिनेमा हॉल, थियेटर, मल्टीप्लेक्स, एन्टरटेनमेन्ट पार्क आदि पूर्व के आदेश के अनुरूप 30 नवम्बर तक बंद रहेंगे। विवाह समारोह में अतिथियों की अधिकतम सीमा 100 रहेगी। अन्तिम संस्कार में 20 व्यक्तियों की सीमा पूर्ववत लागू रहेगी। साथ ही, खुले स्थानों पर जिला कलेक्टर की अनुमति से होने वाले सामाजिक एवं राजनीतिक समारोहों में 2 गज की दूरी बनाए रखकर अधिकतम 250 लोगों तक को ही अनुमति दी जा सकेगी। बन्द हॉल में हॉल की क्षमता के 50 प्रतिशत के साथ अधिकतम 200 लोगों तक अनुमत हो सकेंगे। इन कार्यक्रमों में मास्क पहनने, सोशल डिस्टेसिंग रखने आदि की पालना जरूरी होगी।‘शुद्ध के लिए युद्ध’ अभियान की समीक्षा करते हुए कहा कि मिलावटखोरी को संज्ञेय अपराध बनाने के लिए कानून में संशोधन किया जाएगा।स्वायत्त शासन विभाग के शासन सचिव श्री भवानी सिंह देथा ने बताया कि ‘नो मास्क-नो एन्ट्री’ अभियान के तहत विभिन्न स्वयंसेवी संस्थाओं, स्काउट एण्ड गाइड, एनसीसी, एनएसएस आदि के सहयोग से लोगों को मास्क लगाने के लिए लगातार प्रेरित किया जा रहा है। मास्क वितरण, स्टीकर लगाने, पोस्टर वितरण, जागरूकता रैली आदि आयोजन किए जा रहे हैं। बैठक में चिकित्सा एवं स्वास्थ्य मंत्री डॉ. रघु शर्मा, चिकित्सा एवं स्वास्थ्य राज्यमंत्री डॉ. सुभाष गर्ग, मुख्य सचिव श्री निरंजन आर्य, पुलिस महानिदेशक अपराध श्री एम.एल. लाठर, प्रमुख वित्त सचिव श्री अखिल अरोरा, शासन सचिव चिकित्सा एवं स्वास्थ्य श्री सिद्धार्थ महाजन, सूचना एवं जनसम्पर्क आयुक्त श्री महेन्द्र सोनी सहित अन्य वरिष्ठ अधिकारी भी मौजूद थे।

பொதுமக்கள் மற்றும் கொரோனா நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டும் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுத்து மாநில மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையிலும், பட்டாசு விற்கவும், பட்டாசு வெடிக்கவும் ராஜஸ்தான் மாநில அரசு தடைவிதித்துள்ளது.

பட்டாசு மற்றும் வானவேடிக்கைகளில் இருந்து வரும் நச்சு புகையால், கொரோனா நோயாளிகள், இதயம் நுரையீரல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் பிரச்சினைகள் சந்திக்கின்றனர். இதனால் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் தவிர்க்க வேண்டும். மேலும், திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிக்காமல் இருக்க வேண்டும் என்று, பொதுமக்களுக்கு ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநில குடிமக்களின் உயிர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாகனங்களின் எஞ்சின்களின் இருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்த வேண்டும். மாசு கட்டுப்பாட்டை மீறும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளது. இதனால் பொது ஊரடங்கை மீண்டும் நடைமுறைப்படுத்த பல நாடுகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இங்கும் இப்படி ஒரு நிலை வராமல் இருக்க நாமும் கவனமாக இருக்க வேண்டும்.

பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். இவ்வாறு ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசின் உத்தரவை கண்டு, தமிழ்நாடு பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் அமோர்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.

பட்டாசு விற்பனைக்கு ராஜஸ்தான் மாநில அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்ய வலியுறுத்துமாறு, தமிழ்நாடு பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் அமோர்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் P.கணேசன் என்பவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிவகாசியில் இருந்து இன்று (02.11.2020) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தைப் பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் மாநில அரசின் உத்தரவை முழுமையாகப் படிக்காமல், பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் அமோர்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு ஆதரவாக மின்னல் வேகத்தில் ஒரு அறிக்கையை இன்று (02.11.2020) வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றைக் காரணம் காட்டி பட்டாசு வெடிக்க ராஜஸ்தான் மாநில அரசு தடை போட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இந்தப் பேரிடரால் ஏற்கனவே பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு தயாரிப்பாளர்ககள் பொருளாதார ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் தடுமாற்றத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். இப்படியொரு துயரம் மிகுந்த சூழலில், தீபாவளிப் பண்டிகைதான் அவர்களுக்கு ஓர் ஆறுதலாக இருக்கிறது.

ஆனால் அந்தப் பண்டிகைக் காலத்திலும் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று போடப்பட்டுள்ள இந்தத் தடை ஒட்டுமொத்த பட்டாசு தொழிலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களின் நலன் கருதி பட்டாசு வெடிக்க விதித்திருக்கும் தடையை ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு மட்டுமல்ல; திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது’ என்ற ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் வெளியிட்ட உத்தரவில் எந்த தவறும் இல்லை. இது உலக மக்கள் அனைவரும் வரவேற்க வேண்டிய, பின்பற்ற வேண்டிய வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவு.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள இந்த உத்தரவு, அம்மாநில மக்கள் மீது அவர் கொண்டுள்ள அக்கறையை பிரதிப்பளித்துள்ளது என்பதை, நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவர் ஏதோ சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் எதிரி என்பதைபோல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சித்தரிக்க முயல்வது சரியல்ல.

தமிழ்நாட்டில் “குட்டி ஜப்பான்” என்று அழைக்கப்பட்ட சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களும், முதலாளிகளும் எப்போதும் நலமாக இருக்க வேண்டும்; பொருளாதாரத்தில் எப்போதும் வளமாக நிலைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதேசமயம், தலை அரிக்கிறது என்பதற்காகக் கொல்லிக் கட்டையை எடுத்தா சொறிந்துக் கொள்ள முடியும்?! (அல்லது) தங்க ஊசி என்பதால் கண்ணில் எடுத்துதான் குத்திக் கொள்ள முடியுமா?!

பட்டாசு உற்பத்தியின்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படாதக் காரணத்தால், இதுவரை எத்தனை லட்சம் அப்பாவி தொழிலாளர்கள் தீயில் கருகி துடித்துடிக்க இறந்து போய் இருக்கிறார்கள்?! அதேபோல் பட்டாசு உற்பத்தியின்போது வெடி மருந்தின் நச்சுக் காற்றை சுவாசித்து நாள்பட்ட கொடிய நோய்களுக்கு ஆட்பட்டு நடைப்பிணமாக வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான அப்பாவி தொழிலாளர்களின் உடல் நலத்தையும், அவர்கள் குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்தையும், வாழ்வாதாரத்தையும் பற்றி யாராவது என்றைக்காவது நினைத்ததுண்டா?! அதற்காக எந்த அரசியல்வாதியாவது ஒரு அறிக்கை விட்டதுண்டா?

தூத்துக்குடி ஸ்ரைலைட் ஆலை மற்றும் கூடம் குளம் அணு உலைகளில் எவ்வளவு ஆபத்து இருக்கிறதோ; அதைவிட ஆயிரம் மடங்கு ஆபத்து பட்டாசு உற்பத்தியிலும் இருக்கிறது. அதை நாம் என்றாவது நினைத்துப் பார்த்தது உண்டா?!

இவையெல்லாம் சுடுகாடு அல்ல..!-தமிழ்நாட்டில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து.

நாம் பட்டாசு வெடிக்கும்போது எரிந்து கரியாகிபோவது கருமருந்தும், காகிதமட்டுமல்ல; அது நமது அப்பாவி தமிழ் மக்களின் உழைப்பும், உயிரும் என்பதை நாம் முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் நாம் முதலில் செய்ய வேண்டிய இரண்டு முக்கியமான காரியம் என்ன தெரியுமா?! மது ஆலைகளையும், பாட்டாசுத் தொழிற்சாலைகளையும் நஷ்டஈடு கொடுக்காமல் உடனே இழுத்து மூட வேண்டும். அதில் வேலைச் செய்யும் பணியாளர்களுக்கு அரசாங்கம் உடனடியாக மாற்று வேலை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். இதை யார் செய்வதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கிறார்களோ; அவர்களுக்கு நாம் வாக்களிக்க வேண்டும்.

பட்டாசு வெடிக்காமல் நாம் வாழ்ந்து விடலாம்!-ஆனால், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் எப்படி வாழ முடியும்?!-சற்று மல்லாந்து படுத்து யோசியுங்கள்…!

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply