கட்டிடக் கலைஞர் மற்றும் அவரது தாயார் தற்கொலைக்கு காரணமாக இருந்த ‘ரிபப்ளிக் டிவி’ உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி கைது!- செய்த வேலைக்கு கூலிக் கொடுக்க மறுத்ததால் வந்த வினை…!

Republic TV Editor Arnab Goswami.

Architect Anvay Naik.

ரிபப்ளிக் டிவி’ உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி, அன்வே நாயக் என்பவருக்கு தரவேண்டிய ஒப்பந்த பணி நிலுவைத் தொகையை கொடுக்க மறுத்ததால், அவர் மரண வாக்கு மூலமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நடந்த விபரத்தை அன்வே நாயக் மனைவி மற்றும் மகள் கூறுவதை கேளுங்கள்…!

‛ரிபப்ளிக் டிவி’ நிறுவன மும்பை ஒளிப்பதிவு கூடம் இன்டீரியர் டிசைன் செய்து கொடுத்த கட்டிடக் கலைஞர் அன்வே நாயக் என்பவருக்கு, தர வேண்டிய ரூ.83 லட்ச நிலுவைத் தொகையை ‘ரிபப்ளிக் டிவி’ உரிமையாளரும் மற்றும் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி கொடுக்க மறுத்து அலைக்கழித்தக் காரணத்தால், கட்டிடக் கலைஞர் அன்வே நாயக் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும் தற்கொலை செய்துக் கொண்டனர்.

Architect Anvay Naik.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனக்கு யார், யார் பணம் கொடுக்காமல் அலையவிட்டனர். யார் யார் தனக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்பதை, கட்டிடக் கலைஞர் அன்வே நாயக் மரண வாக்கு மூலமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த பட்டியலில் ‘ரிபப்ளிக் டிவி’ உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி பெயர் முதலிடம் பிடித்தது.

அர்னாப் கோஸ்வாமி தனக்கு இருந்த ஊடக மற்றும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, இவ்வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சித்தார். அதற்காக வழக்கைத் திரும்பப் பெறுமாறு தற்கொலை செயதுக் கொண்ட கட்டிடக் கலைஞர் அன்வே நாயக் மனைவி மற்றும் மகளுக்கு அர்னாப் கோஸ்வாமி அழுத்தம் கொடுத்தார். அதற்கெல்லாம் அஞ்சாமல் தாய், மகள் இருவரும் தொடர்ந்து போராடி வந்ததின் விளைவாக, இவ்வழக்கில் இன்று (04.11.2020) ‘ரிபப்ளிக் டிவி’ உரிமையாளரும் மற்றும் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியை, அவரது வீட்டில் வைத்து மும்பை போலீசார் கைது செய்து இழுத்து சென்றனர்.

‘உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்; தப்பு செய்தவன் கம்பி எண்ணனும்’ – என்ற கிராமத்து பழமொழிதான் இப்போது நம் நினைவுக்கு வருகிறது.

சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம்; படைத்தவனாக இருந்தாலும் சரி; பத்திரிகையாளனாக இருந்தாலும் சரி’.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply