ஜம்மு – காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!- பாதுகாப்பு படையைச் சேர்ந்த கேப்டன் அசுதோஷ் குமார் உள்பட 3 பேர் வீர மரணம்.

ஜம்மு – காஷ்மீர், குப்வாரா மாவட்டம்.

ஜம்மு – காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில், இந்திய எல்லைப் பகுதியில் மச்சில் செக்டரில் எல்.சி வேலி அருகே ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 3 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதில் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த கேப்டன் அசுதோஷ் குமார், ஹவ் பிரவீன் குமார், ரியாடா மகேஸ்வர் ஆகிய 3 பேர் வீர மரணம் அடைந்தனர்.

குப்வாரா மாவட்டம், ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில், வடக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் குப்வாரா நகரமாகும்.

இம்மாவட்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் ஆசாத் காஷ்மீரை எல்லையாக கொண்டுள்ளது. காஷ்மீர் சமவெளியில் வடமேற்கே, கடல் மட்டத்திலிருந்து 5,300 அடி உயரத்தில் இமயமலையில் இம்மாவட்டம் அமைந்துள்ளது.

மேலும், இம்மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை பாரமுல்லா மாவட்டம் சூழ்ந்துள்ளது. இம்மாவட்டம் அடர்ந்த காட்டுப் பகுதிகளைக் கொண்டது. இமயமலையில் உருவாகும் கிருஷ்ணகங்கா ஆறு இம்மாவட்டத்தின், கிழக்கு மேற்காக பாய்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN November 12, 2020 7:27 am

Leave a Reply