The Prime Minister, Shri Narendra Modi, continuing his tradition of spending Diwali with the armed forces interacted and addressed the soldiers at the Indian border post of Longewala. He said his Diwali is complete only when he is with the soldiers whether in the snow-clad mountains or in the desert. He took the greetings, blessings and wishes of every Indian to the armed force personnels at the border. He also greeted the brave mothers and sisters and paid tribute to their sacrifice. The Prime Minister conveyed the gratitude of the countrymen to the armed forces and said 130 crore Indians are standing strongly with the forces.
The Prime Minister emphasized that only that nation is secure which has the capability to face the attackers and intruders. He said irrespective of advances in international cooperation and changes in equations, we simply can’t afford to forget that vigilance is the key to security, alertness is the basis of happiness, and strength is the confidence of victory.
Prime Minister Modi declared that India’s policy is very clear – Today’s India believes in understanding and explaining, however, if there is an attempt to test us, the response will be equally fierce.
He declared that today, the world knows that this country will not compromise at all on its national interest. This status of India is due to its valour and capabilities. India is able to forcefully hold forth on the international fora because of the security provided by the armed forces, India’s military power has enhanced its negotiating power, the Prime Minister said. Today India hits the purveyors of terrorism in their home.
India has come out as a forceful voice against the ideology of expansionism. Entire world is troubled by the forces of expansionism which is a mental perversion reflective of 18th century thinking, he said.
Referring to the stress on Aatmnirbharta and ‘Vocal for Local’, the Prime Minister said that recently it has been decided by the forces that more than 100 weapons and accessories will not be imported anymore. He complimented the armed forces for leading the way in being vocal for local.
Shri Modi called upon the youth of the country to produce for the armed forces as many startups are coming forward to meet the needs of the forces. He expressed the hope that youth-led startups in the defence sector will take the country forward on the path of Aatmnirbharta.
The Prime Minister said, inspired by the armed forces, the country is trying to save each and every citizen in the times of the pandemic. Along with ensuring food for the citizens, the country is working on putting the economy back on track.
The Prime Minister asked the soldiers for three things, first, make innovation part of their daily life. Second, make yoga part of their life and finally, learn at least one more language apart from their mother tongue, Hindi and English. This will infuse your life with new energy, the Prime Minister said.
The Prime Minister recalled the glorious battle of Longewala and said the battle will always be remembered in the annals of strategic planning and military valour. He said this was the time when the ugly face of Pakistan was exposed as its army was terrorizing innocent citizens of Bangladesh and committing atrocities on daughters and sisters. Pakistan opened the front on western border to divert the global attention but our forces gave them a befitting reply.
பிரதமர் நரேந்திர மோதி, ஆயுதப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் தமது வழக்கத்தை இந்த ஆண்டும் தொடர்ந்து மேற்கொண்டு, இந்திய எல்லையில் உள்ள லோங்கேவாலா நிலையில் வீரர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, அவர்கள் இடையே உரையாற்றியுள்ளார். பனி படர்ந்த மலையாக இருந்தாலும், பாலைவனமாக இருந்தாலும், தமது தீபாவளி வீரர்களுடன் இருந்தால் மட்டுமே நிறைவு பெறும் என்று அவர் கூறினார். எல்லையில் உள்ள வீரர்களுக்கு ஒவ்வொரு இந்தியரின் ஆசிகள், வாழ்த்துக்களை அவர் எடுத்து சென்றார். துணிச்சல் மிக்க தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை அவர்களது தியாகத்துக்காக அவர் வாழ்த்தினார். ஆயுதப்படை வீரர்களுக்கு 130 கோடி இந்தியர்களும் ஒற்றுமையுடன் நின்று நன்றி செலுத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்துபவர்கள், ஊடுருவல்காரர்களை எதிர்த்து நிற்கும் திறனை அவர்கள் பெற்றுள்ளதால் நாடு பாதுகாப்பாக உள்ளது என்று பிரதமர் கூறினார். சர்வதேச ஒத்துழைப்பு, சமன்பாடுகளில் மாற்றம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், கண்காணிப்பு பாதுகாப்புக்கு முக்கியம் என்பதையோ, மகிழ்ச்சிக்கு உஷார் நிலை அடிப்படை என்பதையோ, வலிமை என்பது வெற்றிக்கான நம்பிக்கை என்பதையோ நாம் மறந்து விடலாகாது என்று அவர் கூறினார்.
இந்தியாவின் கொள்கை மிகத் தெளிவானது என்று பிரகடனப்படுத்திய பிரதமர், இன்றைய இந்தியா புரிதலில் நம்பிக்கை வைத்துள்ளது என்றார். இருப்பினும், நம்மைச் சோதிக்க முயன்றால், நமது பதிலடி அதே அளவில் தீவிரமானதாக இருக்கும் என அவர் எச்சரித்தார்.
இன்று இந்த நாடு தனது தேசிய நலன் அனைத்திலும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் அறிந்துள்ளது என அவர் கூறினார். இந்தியாவின் இந்த நிலை, அதன் தீரம் மற்றும் திறனால் வந்துள்ளது. ஆயுதப்படையினர் பாதுகாப்பை வழங்குவதால், சர்வதேச அரங்கில் இந்தியா ஆற்றல் மிகு நாடாக முன்னேற முடிந்துள்ளது. இந்தியாவின் ராணுவ பலம் அதன் பேர ஆற்றலை அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இன்று இந்தியா, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களின் இருப்பிடத்தையே தாக்கும் அளவுக்கு வலுவுடன் உள்ளது.
ஆக்கிரமிப்பு சித்தாந்தம் கொண்டவர்களுக்கு எதிரான வலுவான குரலாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும், இத்தகைய ஆக்கிரமிப்பு சக்திகளால் தொல்லைக்கு ஆளாகியுள்ளது. 18-ம் நூற்றாண்டு மனப்போக்கின் பிரதிபலிப்பே இதற்கு காரணமாகும்.
தற்சார்பு இந்தியா, உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுங்கள் ஆகியவை குறித்து குறிப்பிட்ட பிரதமர், நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் துணைப்பொருட்களை இனியும் இறக்குமதி செய்யக்கூடாது என்ற ஆயுதப்படையினரின் முடிவு அடிப்படையில் இது அண்மையில் முடிவு செய்யப்பட்டது என பிரதமர் கூறினார். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுங்கள் முன்முயற்சியின் பெருமை ஆயுதப் படைகளையே சாரும் என்று அவர் பாராட்டினார்.
ஆயுதப்படையினருக்கு தேவையானவற்றை தயாரிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் என்று திரு மோடி அழைப்பு விடுத்தார். தற்போது ஏராளமான முதன்முதலாக தொழில்முனைவோர்கள் ஆயுதப்படையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு துறையில், இளைஞர்களின் தலைமையிலான தொழில் தொடங்கும் நிறுவனங்கள், நாட்டை சற்சார்பு இந்தியா பாதையில் வழிநடத்தும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
ஆயுதப்படையினரால் உத்வேகம் பெற்றுள்ள நாடு, இந்தப் பெருந்தொற்று காலத்தில் ஒவ்வொரு குடிமக்களையும் பாதுகாக்க முயற்சித்து வருகிறது என்று பிரதமர் கூறினார். குடிமக்களுக்கு உணவை உறுதி செய்துள்ளதுடன், பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் மீண்டும் கொண்டு செல்ல நாடு பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
வீரர்கள் மூன்று விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், முதலாவதாக, வீரர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் புதுமையை ஒரு பகுதியாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இரண்டாவதாக, யோகாவை வாழ்க்கையின் பகுதியாக கொள்ள வேண்டும், கடைசியாக, தங்கள் தாய்மொழியை விட கூடுதலாக குறைந்தது இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
லோங்கேவாலாவில் நடைபெற்ற புகழ்பெற்ற சண்டையை பிரதமர் நினைவுகூர்ந்தார். இந்த சண்டை மூலோபாய திட்டம் மற்றும் ராணுவத்தின் தீரத்தை எப்போதும் நினைவுகூருவதாக இருக்கும் என்று அவர் கூறினார். பங்களாதேசில் அப்பாவி மக்களைஅச்சுறுத்தி, பெண்களிடம் அராஜம் புரிந்த பாகிஸ்தான் ராணுவத்தின் கோர முகம் கிழிபட்டதை நினைவுபடுத்திய பிரதமர், உலகத்தின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் தனது மேற்கு எல்லையை திறந்து விட்டது. ஆனால், நமது படை அதற்கு சரியான பதிலடியை அளித்தது என்று தெரிவித்தார்.
–எஸ்.சதிஸ் சர்மா