74 இடங்களை வென்ற கட்சியின் ஆதரவுடன்; 43 இடங்களை வென்ற கட்சியின் தலைவர் முதலமைச்சர்!-நிதிஸ் குமார் குடுமி பாஜக-வின் கையில்!- பீஹார் மாநில அரசியல் நிலவரம்.

நிதிஷ் குமார்.

பீஹார் சட்டச்சபை பொதுத்தேர்தல் -2020 முடிவுகள்.

பீஹார் சட்டச்சபை பொதுத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்துள்ள நிலையில், பீஹாரில் புதிய முதல்வர் தேர்வு மற்றும் பதவியேற்பு விழா நடைப்பெற இருப்பதை முன்னிட்டு, பீஹார் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ் குமார், தன் ராஜினாமா கடிதத்தை பீஹார் ஆளுநருக்கு ஏற்கனவே அனுப்பி வைத்திருந்தார்.

பீஹார் ஆளுநர் பாகு சவுகான்.

13112020B

இந்நிலையில், நிதிஷ் குமாரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக பீஹார் ஆளுநர் பாகு சவுகான் நேற்று முன்தினம் (13.11.2020) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதற்கிடையில், பீஹார் சட்டச்சபை பொதுத்தேர்தலில் வெற்றிப் பெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களின் சந்திப்பு நிதிஷ் குமார் தலைமையில் நடைப்பெற்றது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் சட்ட மன்ற குழு தலைவராக நிதிஷ் குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், நிதிஷ் குமார் தலைமையில் சட்டப்பேரவை கட்சியின் கூட்டம், அன்னி மார்கில் அமைந்துள்ள நிதிஷ் குமார் இல்லத்தில் இன்று (15.11.2020) நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்பார்வையாளராக கலந்துக்கொண்டனர்.

பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் குமார்தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என, தேர்தலுக்கு முன்னதாகவே பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பா.ஜ. தலைமை அறிவித்தது.

முன்கூட்டியே வாக்குறுதி அளித்து விட்டோமே!- என்ற ஆதங்கத்தில், அரசியல் நாகரீகத்திற்காக, பா.ஜ.க. தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக, ஒரு ஒப்புக்காக நிதிஸ் குமாரை பீஹார் மாநில முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள, இல்லை, இல்லை சகித்துக்கொள்ள பா.ஜ.க. தலைமை வேறு வழியில்லாமல் தற்போது முன் வந்துள்ளது. ஆம், 74 இடங்களை வென்ற பாரதிய ஜனதா கட்சி, 43 இடங்களை மட்டுமே வென்ற ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஸ் குமாரை முதலமைச்சராக பதவியில் அமர்த்த முன் வந்துள்ளது.

புழுவுக்கு ஆசைப்பட்டு தூண்டிலில் சிக்கிக் கொள்ளும் மீனைப் போலவும்; வெளிச்சத்தைத் தேடி போகும் விட்டில் பூச்சியைப் போலவும்; கசாப்பு கடைகாரனை நம்பிப் போகும் ஆட்டைப் போலவும்; முதலமைச்சர் பதவிக்காக நிதிஸ் குமார் பேராசைக் கொண்டு அலைகிறார்.

2018 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 78 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களை மட்டுமே வென்ற மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் எச். டி. குமாரசாமியை முதலமைச்சராக பதவியில் அமர்த்தி பழி வாங்கியதைப் போல, பீஹாரில் நிதிஸ் குமாரும் விரைவில் பாஜகவினரால் பழி வாங்கப்படுவார்.

அவ்வளவு ஏன்?! இக்கூட்டணியில் அமைச்சரவை பெயர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பாகவே மிகப் பெரிய தர்ம சங்கடங்களையும், நெருக்கடிகளையும், அவமானங்களையும் நிதிஸ் குமார் நிச்சயம் சந்திக்க வேண்டி வரும். தினந்தோறும் தூங்கி விழிக்கும்போதெல்லாம் தான்தான் பீஹாரின் முதலமைச்சரா? என்ற சந்தேகத்துடனே அவர் படுக்கையில் இருந்து எழவேண்டிய நிலை உருவாகும்.

இதற்கு என்னதான் தீர்வு?! இப்போதும் ஒன்றும் காலம் கடந்துவிட வில்லை! எந்தவித நிபந்தனையுமின்றி பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க ஆதரவு அளித்து விட்டு, அமைச்சரவையில் பங்கேற்காமல், பாரதிய ஜனதா கட்சியின் குடுமியை நிதிஸ் குமார் தன் கை வசம் வைத்துக்கொண்டால், அரசியலில் அவர் இழந்த செல்வாக்கை விரைவில் நிச்சயம் மீட்க முடியும். மக்கள் மனதிலும் அவர் நன்மதிப்பை பெறமுடியும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

பீஹார் மாநில சட்டச்சபை பொதுத்தேர்தலில் யாருக்கு லாபம்!-யாருக்கு நஷ்டம்! 2020/2015 தேர்தல் முடிவுகள் புள்ளி விபரம்.

பீஹார் மாநில சட்டச்சபை பொதுத்தேர்தல்-2020 முடிவுகள்.

—————————————————————————————————————————————

பீஹார் மாநில சட்டச்சபை பொதுத்தேர்தல்-2015 முடிவுகள்!-முழு விபரம்.

2015

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply