மண்ணாசை வெறிப் பிடித்த 80 வயது மனிதர்!- பழனி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன?!-முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுப்பட்ட பழனி சினி திருவள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் சு.நடராஜன்.

சு.நடராஜன் பயன்படுத்திய கை துப்பாக்கி.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பர் தெருவில், இடத்தகராறு சம்மந்தமாக எழுந்த பிரச்சனையில் நேற்று (16.11.2020) காலை 10 மணியளவில், பழனி சினி திருவள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் என்பவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சுப்பிரமணி என்பவருக்கு வலதுபுறம் வயிற்றிலும், பழனிச்சாமி என்பவருக்கு வலதுபுறம் இடுப்புக்கு கீழேயும் குண்டு பாய்ந்தது.

இந்நிலையில், நடராஜனை கைது செய்த பழனி நகர காவல் நிலைய போலிசார், அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294(பி)-பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், 307- கொலை முயற்சி, 27/(1) இந்திய ஆயுதச் சட்டம், தற்காப்புக்காக பயன்படுத்த வேண்டிய துப்பாக்கியை தவறாகப் பயன்படுத்தியதால் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நிலக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த சுப்பிரமணி.

இந்நிலையில் வயிற்றில் குண்டு பாய்ந்த சுப்பிரமணி இன்று உயிரிழந்தார். இதனால் நடராஜன் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மண்ணாசை பிடித்த இந்த 80 வயது முதியவரின் கொலை வெறி, மிகப் பெரிய விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பொம்மை துப்பாக்கியை வைத்துக்கொண்டு விளையாடுவதைப்போல, மிக சர்வ சாதாரணமாக கை துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு வீதியில் விளையாட்டுக் காட்டியுள்ளார்.

மனதளவில் குழந்தைகளும், முதியவர்களும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். எனவே, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்குவதை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஆயுதச் சட்ட (Arms Act) பிரிவில் தேவையான திருத்தங்களை உடனே கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபரீதங்களை தவிர்க்க முடியும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply