கொரோனா பரவலைத் தடுக்க, அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு சேவை புரிவோம்!- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தற்போது மக்களுக்கு கடினமான நேரமாக உள்ளது. இது அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை. அரசியல் மற்றும் குற்றச்சாட்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சிறிது காலம் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதை அனைத்து கட்சிகளும் ஏற்று கொண்டுள்ளன.

மேலும், அனைத்து கட்சிகளும் தமது தொண்டர்களுக்கு அனைத்து பொது இடங்களிலும் முககவசம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சாத் பூஜை பண்டியை மக்கள் எளிமையாக கொண்டாட வேண்டும். குளத்தில் ஒரே நேரத்தில் 200 பேர் இருக்கும் போது, ஒருவருக்கு தொற்று இருந்தாலும், அனைவருக்கும் பரவும் அபாயம் உள்ளது. அதன் மூலம் அதிகம் பேருக்கு பரவும் அபாயம் உள்ளதை அனைவரும் எண்ணி பார்க்க வேண்டும். பண்டிகையை நாம் தடை செய்யவில்லை. குளம் மற்றும் நதிக்கரையில் ஒரே நேரத்தில் அதிகம் பேர் கூடுவதற்கு தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பண்டிகையை வீட்டிலேயே கொண்டாடுவோம்.

மேலும், டெல்லியில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply